உள்ளடக்கத்துக்குச் செல்

மெர்க்குரிப் பூக்கள் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெர்குரிப் பூக்கள் (Mercury Pookkal) எழுத்தாளர் பாலகுமாரனால் எழுதப்பட்ட ஒரு நாவலாகும். சாவி இதழில் 34 வாரங்கள் தொடராக வெளிவந்தது. பின்னர் இந்நாவல் புத்தகமாக வெளியிடப்பட்டது.[1] ஒரு பெரிய உழவு இயந்திரத் தயாரிப்பு நிறுவன வேலைநிறுத்தத்தின் போது நடந்த ஒரு படுகொலையைப் பற்றி விவரிக்கிறது.

கதைக் களம்

[தொகு]

ஓர் உழவு இயந்திரத் தயாரிப்பு நிறுவன வேலைநிறுத்தத்தின் போது நடந்த ஒரு படுகொலையைப் பற்றி நாவல் விவரிக்கிறது. தொழிற்சாலை, அதில் பணியாற்றும் தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், கூலி உயர்வு சார்ந்த போராட்டங்கள் போன்றவையே இந்நாவலின் கதைக் களமாகக் காட்டப்பட்டுள்ளளது.[2] திருமகள் நிலையம் நாவலை வெளியிட்டது.

முக்கிய கதை மாந்தர்கள்

[தொகு]

கதையின் ஆரம்பத்திலேயே உயிரிழந்தாலும் கதை முழுவதும் பேசப்படுகின்ற கணேசன்,[3] எதையும் தீர்க்கமாகச் சிந்தித்துத் துல்லியமாக முடிவெடுக்கும் பெண்மணியாகக் காட்டப்படுகின்ற கணேசனின் மனைவி சாவித்திரி, வழக்கமான தொழிற்சங்கத் தலைவனாகக் கோபலன், கடுமையான காவல் துறை அதிகாரியாகத் துரைசிங்கப் பெருமாள், தன் தொழிற்சாலையை உணர்வுபூர்வமாக நேசிக்கும் அதன் அதிபர் இரங்கசாமி, ஒத்த இரசனையுடைய, பொருந்தாக் காதலில் திளைக்கும் காதலர்களாகச் சங்கரன் - சியாமளி இணை, சியாமளியின் கணவனாக தண்டபாணி, அதிக பெண் பிள்ளைகளைப் பெற்று அவர்களைக் கறையேற்றப் போராடும் அனுப்புகை எழுத்தர் நாராயண சுவாமி, மனிதாபிமானம் சிறிதும் இல்லாத மூர்க்கனாக அறிவுக்கரசன், உணர்சிவயத்திலேயே முடிவெடுக்கப் பழக்கப்பட்ட சுப்பையா போன்ற முக்கிய கதைப் பாத்திரங்கள் நாவலில் இடம்பெற்றுள்ளன. தவிர வேறு சில சிறிய கதைப் பாத்திரங்களும் கதையின் போக்கிற்கு ஏற்ப ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "`இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய பாலகுமாரன்'". BBC News தமிழ். Retrieved 2022-09-25.
  2. "மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal]". Goodreads (in ஆங்கிலம்). Retrieved 2022-09-25.
  3. "பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள்". தினமணி. https://www.dinamani.com/lifestyle/library/2017/nov/29/mercury-pookkal-novel-by-balakumaran-2817285.html. பார்த்த நாள்: 24 December 2022.