உள்ளடக்கத்துக்குச் செல்

மென்பவளக் கடற்குதிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்பவளக் கடற்குதிரை
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சின்கனிதிபார்மிசு
குடும்பம்:
சின்கனிதிடே
பேரினம்:
இனம்:
கி. சப்பெலோங்காடசு
இருசொற் பெயரீடு
கிப்போகாம்பசு சப்பெலோங்காடசு
கோமோன் & குயிடெர், 2009

மென்பவளக் கடற்குதிரை (Hippocampus debelius; கிப்போகாம்பசு டெபெலியசு), என்பது சிங்னாதிடே குடும்பத்தினைச் சார்ந்த கடல் மீன் சிற்றினமாகும். செங்கடலில் உள்ள சூயசு வளைகுடாவில் சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகளிலிருந்து மட்டுமே இது விவரிக்கப்பட்டது. இக்கடற்குதிரை 15 முதல் 30 மீட்டர் அடி ஆழ நீரில் வாழும்.[3][1] இவை மென்மையான பவளப் பாறைகளுடன் தொடர்புடையன எனக் கண்டறியப்பட்டது. இந்த சிற்றினத்தைப் பற்றிய தகவல்கள் அதிகம் அறியப்படவில்லை என்றாலும், இது மற்ற கடற்குதிரைகளைப் போலவே ஓட்டுமீன்களையும் உண்ணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முட்டையிட்டுக் குட்டிபோடும் இனப்பெருக்க முறையினை மேற்கொள்கின்றன. முட்டைகள் பொருக்கும் முன் ஆண் கடற்குதிரைகள் இம்முட்டைகளைத் தனது இனப்பெருக்கப் பையில் எடுத்து வைத்து அடைகாக்கும்.[1]

அடையாளம் காணல்[தொகு]

சேகரிக்கப்பட்ட கடற்குதிரை மாதிரிகள் சுமார் 2.4 சென்டிமீட்டர் (0.94 அங்குலம்) நீளமிருந்தன. இவை குமிழ் முனை, குறைந்த கோணக் கூம்பு மற்றும் தலை, உடற்பகுதி மற்றும் வால் ஆகியவற்றில் நீண்ட மெல்லிய முள்ளெலும்புகளுடன் ஒரு நடுத்தர அளவிலான மூக்கினைக் கொண்டுள்ளன. முதுகெலும்புகள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிற நுனிகளைக் கொண்டுள்ளன.[3]

பெயரிடுதல்[தொகு]

ஒரு காவல்காரராகத் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கிய போதிலும், கடல் வாழ்க்கை குறித்த பல புத்தகங்களை எழுதிய செருமன் இயற்கை ஆர்வலர் கெல்முட் டெபெலியசை சிற்றினப் பெயர் கௌரவிக்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Ouyang, L.; Pollom, R. (2017). "Hippocampus debelius". The IUCN Red List of Threatened Species 2017: e.T47728610A47728833. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T47728610A47728833.en. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. 3.0 3.1 Gomon, M.F.; R.H. Kuiter (2009). "Two new pygmy seahorses (Teleostei: Syngnathidae: Hippocampus) from the Indo-West Pacific". Aqua Int. J. Ichthyol. 15 (1): 37–44. 
  4. "Biographical Etymology of Marine Organism Names. D". Hans G. Hansson. பார்க்கப்பட்ட நாள் 19 May 2018.

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்பவளக்_கடற்குதிரை&oldid=3986313" இலிருந்து மீள்விக்கப்பட்டது