உள்ளடக்கத்துக்குச் செல்

மென்படல-அறிமுகப் பொருண்மை நிறமாலையளவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மென்படல-அறிமுகப் பொருண்மை நிறமாலையளவீடு (Membrane-introduction mass spectrometry) என்பது பகுப்பாய்வுக்கூறுடன் அரைச்சவ்வு வழியாக பொருண்மை நிரல்மாலையின் வெற்றிடக் கோபுரத்தை இணைக்கின்ற முறையாகும் [1][2].

பொதுவாக மெல்லிய, வாயு ஊடுருவத்தக்க, நீர் புகா சவ்வு பயன்படுத்தப்படுகிறது, பாலிடைமெத்தில்சிலாக்சேன் ஒரு உதாரணமாகும். தண்ணீர் உள்ளிட்ட எந்தவொரு பாய்மமும் மாதிரிகளாக இருக்கலாம். சில சமையங்களில் காற்று அல்லது கரைப்பான் கூட மாதிரியாகப் பயன்படுவதுண்டு. எளிமையான மாதிரிகளை அறிமுகப்படுத்துவது இம்முறையின் சிறப்பு ஆகும். சிறிதளவு பகுப்பாய்வுக்கூறு அல்லது மாதிரியைத் தயாரிக்காமல் கூட நிகழ்நேரத்தில் பல்வேறு பகுப்பாய்வுக் கூறுகளை அளவிட இம்முறை பெரிதும் பயன்படுகிறது. மின்முனைவற்ற சிறிய மூலக்கூறுகளையும் இம்முறையில் அளவிட முடியும். ஏனெனில் இத்தைகய மூலக்கூறுகள் மாதிரிகளைக்காட்டிலும் மென்படலப் பொருட்களிடம் அதிக நாட்டம் கொண்டவையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Membrane introduction mass spectrometry: trends and applications". Mass spectrometry reviews 19 (1): 1–37. 2000. doi:10.1002/(SICI)1098-2787(2000)19:1<1::AID-MAS1>3.0.CO;2-Y. பப்மெட்:10715830. 
  2. "Sample preparation for the analysis of volatile organic compounds in air and water matrices". Journal of Chromatography A 1153 (1-2): 130–44. 2007. doi:10.1016/j.chroma.2007.01.012. பப்மெட்:17258752.