மெத்தில் ஐசோ சையனைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஐசோசயனோமீத்தேன்
| |
வேறு பெயர்கள்
மீதைல் ஐசோசயனைடு; ஐசோஅசிட்டோன்நைட்ரைல்; மீதைல்ஐசோநைட்ரைல்; ஐசோமீத்தேன்நைட்ரைல்; மீத்தேன்ஐசோநைட்ரைல்
| |
இனங்காட்டிகள் | |
593-75-9 | |
ChEBI | CHEBI:44177 |
ChemSpider | 11156 |
DrugBank | DB04337 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11646 |
| |
பண்புகள் | |
C2H3N | |
வாய்ப்பாட்டு எடை | 41.05 g·mol−1 |
தோற்றம் | colorless liquid |
அடர்த்தி | 0.69 கி/மிலி திரவம் |
உருகுநிலை | −45 °C (−49 °F; 228 K) |
கொதிநிலை | 59–60 °C (138–140 °F; 332–333 K) |
miscible | |
கரைதிறன் | organic solvents |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | எளிதில் தீப்பற்றக்கூடியது, தீங்குவிளைப்பது |
R-சொற்றொடர்கள் | R11, R20/21/22, R36 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S16, S36/37 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில் ஐசோ சயனைடு அல்லது ஐசோ சயனோ மீத்தேன் (Methyl isocyanide or Isocyanomethane) ஐசோ சயனைடு குடும்பத்தின் ஒரு கரிமச்சேர்மமாகும் .இந்த நிறமற்ற நீர்மம் மெத்தில் சயனைடின் மாற்றியமாகும். (அசிட்டோநைட்ரில்) ,ஆனால் வினைத்திறனில் இது மிகவும் வேறுபடுகிறது. 5-முனை பல்லணு வளையங்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது . மெத்தில் ஐசோ சயனைடில் C -H இடையேயான பிணைப்புத்தூரம் மிகவும் குறுகியது. ஐசோ சயனைடில் C-H பிணைப்பு தூரம் 1.158 Å ஆகும்.[1]
தயாரிப்பு மற்றும் பயன்கள்
[தொகு]மெத்தில் ஐசோ சயனைடை காட்டியர் முதன் முதலில் சில்வர் சையனைடுடன் மெத்தில் அயோடினை வினைப்படுத்தி தயாரித்தார்.[2][3] N -மெத்தில்பார்மமைடின் நீர் நீக்க வினையானது மெத்தில் ஐசோ சயனைடை தயாரிக்கும் ஒரு பொதுவான முறையாகும் .[4]
மெத்தில் ஐசோ சயனைடு பல்வேறு பல்லணு வளையங்களை தயாரிக்க பயன்படுகிறது .மேலும் கரிமஉலோக வேதியியலில் இது ஒரு ஈனியாகும் .[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Myer Kessler, Harold Ring, Ralph Trambarulo, Walter Gordy "Microwave Spectra and Molecular Structures of Methyl Cyanide and Methyl Isocyanide" Phys.
- ↑ Gautier, A. (1868). "Ueber eine neue Reihe von Verbindungen, welche mit den Cyanwasserstoffsäure-Aethern isomer sind". Justus Liebigs Annalen der Chemie 146 (1): 119–124. doi:10.1002/jlac.18681460107.
- ↑ Gautier, A. (1869). "Des Nitriles des Acides Gras: Deuxième Partie - Des Carbylamines". Annales de Chimie et de Physique 17: 203. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k34827s/f102.image.langEN.
- ↑ R. E. Schuster, James E. Scott, and Joseph Casanova, Jr (1966). "Methyl isocyanide". Organic Syntheses 46: 75. doi:10.15227/orgsyn.046.0075.
- ↑ "Methyl isocyanide". Encyclopedia of Reagents for Organic Synthesis. (2001). John Wiley & Sons. DOI:10.1002/047084289X.rm198.