மெத்திலமோனியம் நைட்ரேட்டு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
மெதிலமோனியம் நைட்ரேட்டு
| |||
வேறு பெயர்கள்
மெதிலமீன் நைட்ரேட்டு; ஒற்றை-மெதிலமீன் நைட்ரேட்டு; MMAN
| |||
இனங்காட்டிகள் | |||
22113-87-7 | |||
ChemSpider | 9063095 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 10887831 | ||
| |||
பண்புகள் | |||
CH6N2O3 | |||
வாய்ப்பாட்டு எடை | 94.07 கி/மோல் | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | அமோனியம் நைட்ரேட்டு ஐதராக்சிலமோனியம் நைட்ரேட்டு எத்திலமோனியம் நைட்ரேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மெத்திலமோனியம் நைட்ரேட்டு (Methylammonium nitrate) என்பது CH6N2O3 மற்றும் CH3NH3+NO3- என்ற இரு மாறுபட்ட மூலக்கூறு வாய்ப்பாடுகளை கொண்ட ஒரு வெடிக்கும் தன்மையுள்ள வேதிப்பொருளாகும். நைட்ரிக் அமிலத்துடன் மெதிலமீன் சேர்ந்து நடைபெறும் நடுநிலையாக்கல் வினையால் இந்த உப்பு உருவாகிறது. மெத்திலமீன் நைட்ரேட்டு மற்றும் மோனோமெதிலமீன் நைட்ரேட்டு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தை மெத்தில் நைட்ரமீன் அல்லது மோனோமெதில் நைட்ரமீனுடன் இணைத்து குழப்பமேற்படுத்திக் கொள்ளக்கூடாது.
மெத்திலமோனியம் நைட்ரேட் முதன்முதலில் இரண்டாம் உலகப் போரின்போது செருமானியர்களால் ஒரு வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது. [1] முதலில் இதை மோனோ-மெத்திலமைன் நைட்ரேட் என்ற பெயரால் அழைத்தார்கள். இப்பெயரே ஆற்றல்மிக்க பொருட்களை உருவாக்கும் வேதியியலாளர்களிடையே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது.
மெத்திலமோனியம் நைட்ரேட்டின் வெடிக்கும் பண்புகள் அம்மோனியம் நைட்ரேட்டின் வெடிக்கும் பண்புகளுடன் சற்றே ஒத்திருக்கின்றன.
அம்மோனியம் நைட்ரேட்டை ஒரு வெடிபொருளாக இதனுடன் இணைக்கும்போது நைட்ரோகிளிசரின் சக்தியின் 85% விளைவுகள் கிடைக்கின்றன. மெத்திலமோனியம் நைட்ரேட்டில் கார்பன் அணுவினைக் கொண்ட மெத்தில் குழுவைச் சேர்ப்பது சிறந்த வெடிக்கும் பண்புகளை அளிக்கிறது. இச்சேர்மத்தில் உள்ள கூடுதல் கார்பன் மற்றும் ஐதரசன் அணுக்கள் அம்மோனியம் நைட்ரேட்டைக் காட்டிலும் சிறந்த ஆக்சிசன் சமநிலையைப் பெறவும் உதவுகின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மெத்திலமோனியம் நைட்ரேட் வெடிபொருள் உற்பத்தியாளர்களால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது. குறைந்த விலை அம்மோனியம் நைட்ரேட்டுக்கு ஆதரவாக. அம்மோனியம் நைட்ரேட்-எரிபொருள் எண்ணெய் கலவைகள் பெரும்பாலான பெரிய விட்டம் கொண்ட வெடிபொருள் பயன்பாடுகளுக்கு ஏற்றவையாக இருந்தன.
ஈ.ஐ.டூ பாண்டு டி நெமோர்சு நிறுவனம் அதன் டி.என்.டி- அடிப்படையிலான டோவெக்சு நீர்க்களி வெடிபொருட்களின் விலையைக் குறைக்க முயன்றபோது மெத்திலமோனியம் நைட்ரேட்டு உற்பத்தி மீண்டும் உயிர்பெற்றது. மெத்திலமோனியம் நைட்ரேட்டு மற்றும் அம்மோனியம் நைட்ரேட்டு கலவையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நீர் – களி வெடிபொருள்களை டோவெக்சு எக்சுட்ரா மற்றும் பர்வெக்சு எக்சுட்ரா என்ற பெயர்களில் டு பாண்ட் நிறுவனம் தயாரித்தது. பி.ஆர்-எம் என்றும் அழைக்கப்படும் மெத்திலமோனியம் நைட்ரேட்டு குறைந்த விலையில் வெடிக்கும் காரணிகளை (நீர் - களி வெடிபொருட்கள்) உருவாக்குவதற்கான சாத்தியமான பாதையாகக் காணப்பட்டது. இது நைட்ரோகிளிசரினை (டைனமைட்டுகள்) அடிப்படையாகக் கொண்ட வெடிபொருட்களுக்கு மாற்றாக பதிலீடு செய்யப்பட்டது. நீர்-களி வெடிபொருள்கள் நீரில் உள்ள நைட்ரேட்டுகளின் பால்மங்கள் அல்லது குழம்புகள் ஆகும். மேலும், அவை ஈரமான சுரங்கச் சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படலாம். மற்ற வெடிபொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதிகம் செலவிழுக்கக்கூடிய உலர்த்தல் செயல்முறை இதற்கு தேவைப்படுகிறது.
1973 இன் பிற்பகுதியில், டுபோன்ட் டைனமைட்டை வெளியேற்றவும், பி.ஆர்-எம் அடிப்படையில் நீர்-களிகளை மாற்றவும் தொடங்கியது. இருப்பினும், பி.ஆர்-எம் அசாதாரண "வெகுசன விளைவுகளை" நிருபித்தது. அதாவது, போதுமான அளவு இருந்தால் அது சில நிபந்தனைகளின் கீழ், பி.ஆர்-எம் எச்சரிக்கையின்றி வெடிக்கக்கூடும். ஆகத்து 6, 1974 அன்று, வாசிங்டன், ரெயில் யார்டில் உள்ள வெனாட்சியில் பி.ஆர்-எம் கொண்ட ஒரு தொட்டி கார் வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் 66 பேர் காயமடைந்தனர் [2]. 1976 ஆம் ஆண்டு சூலை 4 அன்று டபிள்யு.வி.யின் மார்ட்டின்சுபர்க்கில் உள்ள டுபோன்ட்டின் பொடோமேக் ரிவர் ஒர்க்சு நிறுவனத்தில் 60,000 பவுண்டுகள் பி.ஆர்-எம் கொண்ட ஒரு பி.ஆர்-எம் சேமிப்புக்கலன் வெடித்தது. உயிர் இழப்பு எதுவும் இல்லை என்றாலும் பல காயங்கள் மற்றும் கணிசமான சொத்து இழப்புக்கள் இருந்தன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Urbanski, The Chemistry and Technology of Explosives, Volume 2
- ↑ HistoryLink Essay: Burlington Northern tank-car explodes in South Wenatchee killing two people and injuring 66 on August 6, 1974