உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்டொனால்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்டொனால்டைட்டு
Macdonaldite
மெக்டொனால்டைட்டின் வெள்ளை தெளிப்புகள் மற்றும் மெக்குன்னசைட்டின் நீல நிற மேலோடு
பொதுவானாவை
வகைபைல்லோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுBaCa4Si16O36(OH)2·10H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது, வெண்மை
படிக இயல்புஊசி மற்றும் இழை வடிவம், கதிரியக்கத் திரட்சிகள் மற்றும் மணிகள்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு{010} சரிபிளவு {001} தெளிவு , {100} புலப்படாது
மோவின் அளவுகோல் வலிமை3.5–4.0
மிளிர்வுபட்டுப் போன்ற பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி2.27
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+/−), மேற்பரப்பில் – குறைவ ,
ஒளிவிலகல் எண்nα = 1.518 nβ = 1.524 nγ = 1.530
இரட்டை ஒளிவிலகல்0.012
2V கோணம்அளக்கப்பட்டது : 90°
நிறப்பிரிகைபலவீனம்
மேற்கோள்கள்[1][2][3][4][5]

மெக்டொனால்டைட்டு (Macdonaldite) என்பது BaCa4Si16O36(OH)2·10H2O.[6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய பேரியம் சிலிக்கேட்டு கனிமமான இதை முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் விவரித்தனர். அவாய் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த அமெரிக்க எரிமலை நிபுணர் கோர்டன் ஏ. மெக்டொனால்டு (1911-1978) நினைவாக கனிமத்திற்கு மெக்டொனால்டைட்டு என்று பெயரிடப்பட்டது.[6]

நேர்சாய்சதுரப் படிகக்கட்டமைப்பில் மெக்டொனால்டைட்டு படிகமாகிறது. மேலும் இது திசைமாறுபாட்டுப்பண்பைக் கொண்டுள்ளது.[7]

மெக்டொனால்டைட்டு ஒரு சான்போர்னைட்டு மற்றும் குவார்ட்சு தாங்கி உருமாற்ற பாறையின் விளிம்புகள் மற்றும் பிளவுகளில் பூச்சுகளாக தோன்றுகிறது. மெக்டொனால்டைட்டு முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் பிரெசுனோ மாகாணத்திற்கு அருகில் கண்டறியப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள மரிபோசா மற்றும் துலரே மாவட்டங்களிலும் இது கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது.[3][6] இத்தாலியின் உம்ப்ரியாவில் உள்ள சான் வெனான்சோவில் உள்ள ஒரு கல் குவாரியிலிருந்தும் கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது.[3]

பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் மெக்டொனால்டைட்டு கனிமத்தை Mcd[8] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mineralienatlas
  2. "Macdonaldite at webmineral.com".
  3. 3.0 3.1 3.2 "Macdonaldite at mindat.org".
  4. "Macdonaldite".
  5. Handbook of Mineralogy
  6. 6.0 6.1 6.2 Alfors, J.T., Stinson, M.C., Matthews, R.A., and Pabst, A. (1965) Seven new barium minerals from eastern Fresno County, California. American Mineralogist, 50, 314–340.
  7. Bloss, F.D. (1999) Optical Crystallography. Mineralogical Society of America, 5, 161–163.
  8. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்டொனால்டைட்டு&oldid=4185421" இலிருந்து மீள்விக்கப்பட்டது