மெகாலோசாரஸ்
மெகாலோசாரஸ் புதைப்படிவ காலம்:சுராசிக் காலத்தின் அழிந்து போன இனம் | |
---|---|
1824 ஆம் ஆண்டில் எம். பக்லாண்ட் என்பவரால் அடையாளம் காணப்பட்ட தொல்லுயிர் எச்சம். தற்போது ஆக்சுபோர்டு பல்கலைக்கழக இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | மெகாலோசாரஸ் |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/மெகாலோசாரஸ்ம. பக்லாண்டி
|
இருசொற் பெயரீடு | |
ம பக்லாண்டி மென்ட்டல், 1827 |
மெகாலோசாரஸ் (Megalosaurus) என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த தொன்மாவாகும். இது 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படுகிறது.[1]
இந்த மிருகத்தின் எலும்புக்கூடு தொகுதிகள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு இங்கிலாந்து நாட்டின் காட்சி சாலையிலும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழக காட்சி சாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.[2][3][4]
பின்னணி
[தொகு]ஊர்வன இனத்தில் நீளமானது என்ற பெயரைக் குறிக்க "மெகாலோசாரஸ்” என்று அழைக்கப்படுகிறது.[5] இந்த மிருகம் சுமார் 30 அடி நீளமும், உயரம் சுமார் 12 அடி கொண்டது.
மிக வலிமையான இரண்டு கால்களின் உதவியால் இதன் கணத்த உடல் தாங்கப்பட்டு இருந்திருக்கிறது. முன் இரண்டு கால்கள் மிகச் சிறியதாக இருந்தது. அதனால் அதற்கு எந்தப் பயனும் இருந்திருக்காது என்று கருதுகின்றனர்.
மற்ற மிருகங்கள் போல் தலை நிமிர்ந்து நிற்காமல் ஒரு படுக்கை வசத்திலேயே வலிமையான இரண்டு கால்களால் தாங்கப்பட்டு, தலைப் பகுதியும் உடல் பகுதியும் சமமாக இருக்க இதன் உடலின் பின் பகுதியான வால் திண்மையான நீண்டு இருந்திருக்கிறது.
குனிந்த நிலையிலேயே இரண்டு கால்களின் உதவியால், ஓடவோ நடக்கவோ செய்திருக்க வேண்டும் என்று தொல்லுயிர் அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதன் பொரிய தலையும் கூர்மையான பற்களும் இது ஒரு மாமிசம் உண்ணும் விலங்காக வாழ்ந்திருக்கிறது என்று தெரிகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Delair, J.B., and Sarjeant, W.A.S. (2002). The earliest discoveries of dinosaurs: the records re-examined. Proceedings of the Geologists' Association 113:185–197.
- ↑ Gunther, R.T. (1945). Early Science in Oxford: Life and Letters of Edward Lhuyd, volume 14. Author:Oxford.
- ↑ Lhuyd, E. (1699). - 1328. Plectronites belemnitam referens compressior, ab utroque latere excoriatus. E fodinis Stunsfeldiensibus. (pg. 66)
- ↑ Lhuyd, E. (1699). Lithophylacii Britannici Ichnographia, sive lapidium aliorumque fossilium Britannicorum singulari figura insignium. Gleditsch and Weidmann:London.
- ↑ Babcock, Loren E. (18 March 2024). "Nomenclatural history of Megalonyx Jefferson, 1799 (Mammalia, Xenarthra, Pilosa, Megalonychidae)" (in en). ZooKeys (1195): 297–308. doi:10.3897/zookeys.1195.117999. பன்னாட்டுத் தர தொடர் எண்:1313-2970. பப்மெட்:38532771. பப்மெட் சென்ட்ரல்:10964019. Bibcode: 2024ZooK.1195..297B. https://zookeys.pensoft.net/article/117999/.
- ↑ Plot, R. (1677). "The Natural History of Oxford-shire, Being an Essay Toward the Natural History of England". Mr. S. Miller's: 142. doi:10.5962/bhl.title.23488. https://www.biodiversitylibrary.org/bibliography/23488.
மேலும் சில ஆதாராங்கள்
[தொகு]- Carrano, M.T.; Benson, R.B.J.; & Sampson, S.D. (2012). "The phylogeny of Tetanurae (Dinosauria: Theropoda)". Journal of Systematic Palaeontology 10(2): 211–300