மூஸ் மாகாணம்
மூஸ் மாகாணம்
Muş ili | |
---|---|
துருக்கியில் மூஸ் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பகுதி | மையக்கிழக்கு அனதோலியா |
துணைப்பகுதி | வான் |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | மூஸ் |
• ஆளுநர் | ஆல்கர் குண்டாசஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,196 km2 (3,164 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 4,07,992 |
• அடர்த்தி | 50/km2 (130/sq mi) |
இடக் குறியீடு | 0436 |
வாகனப் பதிவு | 49 |
மூஸ் மாகாணம் (Muş Province, துருக்கியம்: Muş ili , Kurdish ) என்பது கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இது 8,196 கிமீ 2 பரப்பளவு கொண்டுள்ளது. மேலும் 2010 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி இதன் மக்கள் தொகை 406,886 ஆகும். இது 2000 ஆம் ஆண்டில் 453,654 ஆக இருந்தது. மாகாண தலைநகரம் மூஸ் நகரம் ஆகும். மூஸ் மாகாணத்தில் உள்ள மற்றொரு நகரம், மலாஸ்கர்ட் ( மான்சிகர்ட் ), இது 1071 இல் நிகழ்ந்த மான்சிகர்ட் போருக்காக பிரபலமானது. மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் குர்து மக்களாவர். 2018 அக்டோபரில் ஆல்கர் குண்டாச்சை மாகாண ஆளுநராக ரசிப் தைய்யிப் எர்டோகன் நியமித்தார்.[2]
மாவட்டங்கள்
[தொகு]முஸ் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):
- புலனக்
- ஹஸ்காய்
- கோர்கட்
- மலாஸ்கர்ட்
- மூஸ்
- வர்டோ
பொருளாதாரம்
[தொகு]வரலாற்று ரீதியாக, மூஸ் மகாணம் கோதுமை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்றது.[3] மாகாணத்தில் மடர் என்னும் தாவரம் வளர்கிறது. இதை உள்ளூர்வாசிகள் சாயத்திற்காகப் பயன்படுத்தினர் .[4] இப்பகுதியில் உப்பு சுரங்கங்களும் இருந்தன . 1920 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, அது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் போதுமான அளவு இருப்பதாகக் கூறப்பட்டது.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
- ↑ "Valimiz". www.mus.gov.tr. Archived from the original on 2015-05-26. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.
- ↑ Armenia and Kurdistan.
- ↑ Armenia and Kurdistan.
- ↑ Armenia and Kurdistan.