மூச்சுக் கட்டு (சுவாசக் கட்டு)
Appearance
மானிடர் நாள் முழுதும் சுவாசிக்கும் காற்றில் மூன்றில் ஒரு பகுதி உடலின் மூலாதாரத்தை அடையாமல் வீணடிக்கப்படுகிறது. அந்த வீணடிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதி சுவாசத்தையும் வீணாக்காமல் சுவாசிப்பதே சுவாச பந்தனம் எனப்படும் யோகக் கலையாகும்.
யூகிமுனி
[தொகு]மானிடருக்கு ஒரு நாளில் 21,600 சுவாசம் உண்டாவதாகவும் அதில் 14,400 சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும்[1] மற்ற 7,200 சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், இந்த 7200 சுவாசம் வீணாகாமல் சுவாச பந்தனம் செய்வதன் மூலம் சுவசிப்பவருக்கு எக்காலமும் பிணி, மூப்பு , சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என்கிறார் யூகிமுனி.[2]