உள்ளடக்கத்துக்குச் செல்

மு. வெ. மாத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகுத் வெகாரி மாத்தூர் (M. V. Mathur) என்பவர் ஓர் இந்தியப் பொருளாதார நிபுணரும் அறிஞரும் ஆவார். இவர் இராசத்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், செய்ப்பூரைத் தளமாகக் கொண்ட ஐடிஎஸ் என்றும் அழைக்கப்படும் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தின் நிறுவனத் தலைவராகவும் இருந்துள்ளார்.

1915ஆம் ஆண்டில் இந்தியாவின் அல்வாரில் பிறந்த மாத்தூர், 1966 முதல் 1968 வரை இராசத்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். பின்னர் 1974 முதல் 1975 வரை தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குநராகவும். 1975 முதல் 1980 வரை தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். 1981 முதல் 1987 வரை மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத் தலைவராகவும் இருந்த இவர், மத்திய அரசின் நான்காவது ஊதியக் குழு, மூன்றாம் நிதிக் குழு, கல்விக் குழு மற்றும் தோட்ட விசாரணைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். 1978 முதல் 1980 வரை மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை மறுசீரமைப்பது குறித்த இராசத்தான் அரசின் குழுவிற்கும் மாத்தூர் தலைமை தாங்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மாத்தூர் 1939-இல் சரோஜ் குமாரியை மணந்தார். இந்தத் தம்பதிக்கு மூன்று மகள்கள் இருந்தனர். தனது இறுதி ஆண்டுகளில், மாத்தூர் அமெரிக்காவில் வசித்து வந்தார். இங்கு இவர் மேரிலாந்தின் பால்டிமோரில் 21 சனவரி 2004 அன்று இறந்தார்.

விருதுகள்[தொகு]

பொருளாதார ஆராய்ச்சியில் இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 1989ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[1] இதற்கு முன்பு, 1983ஆம் ஆண்டில் பாரிக் நினைவு விருதையும், 1984ஆம் ஆண்டில் இராசத்தான் அரசிடமிருந்து இராசத்தான் ரத்னா விருதையும் பெற்றிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Bhushan Awardees - Padma Awards - My India, My Pride - Know India: National Portal of India". archive.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._வெ._மாத்தூர்&oldid=4041262" இலிருந்து மீள்விக்கப்பட்டது