உள்ளடக்கத்துக்குச் செல்

முள்ளுக்கண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முள்ளுக்கண்ணி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. pungens
இருசொற் பெயரீடு
Alternanthera pungens
Kunth
வேறு பெயர்கள்

Alternanthera achyrantha R.Br. ex Sweet

ஹோர்டஸ் எல்தாமென்சிஸின் விளக்கம்
ஹிஸ்டோயர் நேச்சர்லே டெஸ் ஐல்ஸ் கேனரிசில் ஒரு விளக்கப் படம்

முள்ளுக்கண்ணி (தாவர வகைப்பாட்டியல்: Amaranthus pungens) என்பது அமராந்தேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஊர்ந்து சென்று, நீண்டு வளரும் முன்னோடிச் சிறப்பினம் ஆகும். இது விதை மூலமாகவும், தாவர ரீதியாகவும் பரவுகிறது. பெரும்பாலும் தண்டுகளில் முளைக்கும் வேர்களின் மூலமாகவே பரவுகிறது. இது சாலையோரங்களிலும், நடை பாதை ஓரங்கள், குப்பைகள் போன்ற இடங்களில் வளர்கின்ற தாவரம் ஆகும். இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து வந்ததாகவும், ஆத்திரேலியா மற்றும் தெற்கு ஆபிரிக்காவில் பரவலாக நிலைத்ததாகவும் கருதப்படுகிறது. இந்த பேரினத்தின் பிற இனங்கள், எ.கா Alternanthera sessilis வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் நீண்ட காலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அயல் தாவரமாக நிரூபிக்க கடினமாக உள்ளது. [1]

இந்த இனங்கள் மழைக்காலத்தில் தண்டுகள் மற்றும் இலைகளுடன் அடர்த்தியாக பரவுகிறன. வறண்ட பருவத்தில் அல்லது வறட்சியின் போது, தரையில் மேலே உள்ள தாவர உறுப்புகள் இறந்துவிடும். ஆனால் செயலற்ற தாவரமாக அதன் சதைப்பற்றுள்ள வேர் நிலைத்திருக்கும். மழை பெய்த பிறகு துளிர்த்து வளரும். இலைக் கணுக்களில் சிறிய வெள்ளை பூங்கொத்துகள் உருவாகின்றன. சிறிய, முட்கள் நிறைந்த, தாள் போன்ற காக்கி நிறமுள்ள, காய்கள் தண்டு இல்லாமல், இலைக் கணுக்களில் உருவாகின்றன. அவை சரக்குகள், வாகனங்கள், தீவனங்கள் போன்றவற்றின் வழியாக பரவுகின்றன. இதன் விதைகள் பளபளப்பான பழுப்பு நிறத்தில், தட்டடையனதாக சுமார் 1.5 மிமீ குறுக்களவு கொண்டதாக இருக்கும். [2]

இந்த இனம் 1732 ஆம் ஆண்டிலேயே ஜோஹன் ஜேக்கப் டில்லேனியஸ் என்பவரால் அவரது ஹோர்டஸ் எல்தாமென்சிஸ், தொகுதியில் விளக்கப்பட்டுள்ளது. 1, மேலும் "Achyracantha repens foliis Bliti pallidi" என விவரிக்கப்பட்டது. மீண்டும் 1836 இல் ஜீன்-கிறிஸ்டோஃப் ஹெய்லண்ட் (1792- -1866) என்பவரால் Histoire naturelle des Iles Canaries, தொகுதி. 2(3): ப. 193, டி. 199 (1836) இல் இடம்பெற்றது. கியூ தற்போது 139 இனங்களை Alternanthera பேரினத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. [3]

ஒத்த பெயர்கள்

[தொகு]
  • Alternanthera achyrantha R.Br. ex Sweet [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Common Rhodesian Weeds" - H. Wild (1955)
  2. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  3. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
  4. Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளுக்கண்ணி&oldid=3862655" இலிருந்து மீள்விக்கப்பட்டது