மும்மெத்தில்சல்போனியம்
Appearance
மும்மெத்தில்சல்போனியம் (Trimethylsulfonium) என்பது (CH3)3S+ என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட எளிய சல்போனியம் சேர்மமாகும். இது மும்மெத்தில்சல்பானியம் என்றும் ஆக்சிசனேற்ற நிலை(1+) ஆகவுள்ள மும்மெத்தில்கந்தகம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தின் வேதிவாய்ப்பாட்டை (C3H9S+ ) என்றும் எழுதுகிறார்கள்.
மும்மெத்தில்சல்போனியத்தின் பல உப்புகள் அறியப்படுகின்றன.
உப்பு | மூலக்கூற்று வாய்ப்பாடு | வேதி வாய்ப்பாடு | மூலக்கூற்று எடை | பண்புகள் |
---|---|---|---|---|
மும்மெத்தில்சல்போனியம் குளோரைடு | (CH3)3SCl | C3H9ClS | 112.5 |
100 0 செல்சியசு வெப்பநிலையில் மும்மெத்தில்சல்போனியம் சிதைவடைகிறது. நீர் உறிஞ்சும் திறன் கொண்டதாய் எத்தனாலில் மிக நன்றாகக் கரையக்கூடியதாய் இருக்கிறது.[1] |
மும்மெத்தில்சல்போனியம் புரோமைடு | (CH3)3SBr | C3H9BrS | 157 | நீரின் மூலம் கிடைகின்ற படிகங்கள் 172 0 செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகின்றன. மூடிய குழாயில் 201 0 செல்சியசு வெப்பநிலையில் உருகுகின்றது. நடுநிலை நீர்க்கரைசலில் வினைபுரிகின்றன.[2] |
மும்மெத்தில்சல்போனியம் அயோடைடு | (CH3)3SI | C3H9IS | 204 | எத்தனாலில் இருந்து பெறப்படும் படிகங்கள் 203 – 207 0 செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகின்றன.[2][3] |
மேற்கோள்கள்
[தொகு]- மேற்கண்ட பதிவுகள் யாவும் பிரிட்டனில் கரிமச் சேர்மங்களின் எயில்பிரான் அகராதி, தொகுதி 4 , திருத்திய பதிப்பு 1953 இல் வெளியிடப்பட்டவையாகும்.