முப்பீனைல்பாசுபீன் இருகுளோரைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Dichlorotri(phenyl)-λ5-phosphane | |||
வேறு பெயர்கள்
இருகுளோரோயிருபீனைல்பாசுபோரேன்
| |||
இனங்காட்டிகள் | |||
2526-64-9 | |||
ChemSpider | 228579 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 260420 | ||
| |||
UNII | 6CL2293LZ3 | ||
பண்புகள் | |||
C18H15Cl2P | |||
வாய்ப்பாட்டு எடை | 333.19 கி/மோல் | ||
உருகுநிலை | 176 °C (349 °F; 449 K)[1] 85-100 °C[2] | ||
வினைபுரியும் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
முப்பீனைல் பாசுபீன் இரு குளோரைடு (Triphenylphosphine dichloride) என்பது C18H15Cl2P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். இச்சேர்மம் கரிம வேதியியலில் ஒரு குளோரரினேற்ற காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆல்ககால்கள் மற்றும் ஈதர்களை அல்கைல் குளோரைடுகளாக மாற்றுவது, எப்பாக்சைடுகளை விசினல் இரு குளோரைடுகளாக பிளப்பது, கார்பாக்சிலிக் அமிலங்களை அசைல் குளோரைடுகளாகக் குளோரினேற்றம் செய்வது போன்றவை இதன் பயன்பாடுகளாகும்.[2]
கட்டமைப்பு
[தொகு]அசிட்டோநைட்ரைல் போன்ற முனைவுறு கரைப்பான்களில் முப்பீனைல் பாசுபீன் இரு குளோரைடு (Ph3PCl2) பாசுபோனியம் அயனி உப்பு கட்டமைப்பை [Ph3PCl+]Cl− ஏற்றுக் கொள்கிறது.[3] டை எத்தில் ஈதர் போன்ற முனைவற்ற கரைப்பான்களில் கரைப்பானேற்றம் அடையாத முக்கோண இரட்டைப் பட்டைக்கூம்பு மூலக்கூறு அமைப்பை ஏற்கிறது.[4] இரண்டு [Ph3PCl+] இனங்கள் ஓர் அசாதாரண ஈரணுக்கரு அயனி அமைப்பையும் ஏற்றுக்கொள்ளலாம். இரண்டும் நீண்ட Cl-Cl தொடர்புகள் வழியாக Cl− உடன் தொடர்பு கொள்கின்றன.
தயாரிப்பு
[தொகு]முப்பீனைல் பாசுபீனுடன் குளோரினை சேர்த்து வினைபுரியச் செய்தால் முப்பீனைல் பாசுபீன் இரு குளோரைடு உருவாகிறது.
- Ph3P + Cl2 → Ph3PCl2
இரண்டு வினைக்காரணிகளும் குறிப்பாக கரைசலாகவே பயன்படுத்தினால்தான் வேதிச்சமானத்தை பராமரிக்க முடியும்.
மாற்றாக, முப்பீனைல் பாசுபீன் ஆக்சைடை குளோரினேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம். உதாரணமாக, பாசுபரசு முக்குளோரைடு. இது கிரிக்னார்டு தொகுப்பு வினை 1931 போன்றதாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 விக்டர் கிரின்யார்டு, J. Savard (1931). Comptes rendus de l'Académie des sciences 192: 592–5.
- ↑ 2.0 2.1 e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis, எஆசு:10.1002/047084289X.rt371
- ↑ S. M. Godfrey; C. A. McAuliffe; R. G. Pritchard; J. M. Sheffield (1996). "An X-ray crystallorgraphic study of the reagent Ph3PCl2; not charge-transfer, R3P–Cl–Cl, trigonal bipyramidal or [R3PCl]Cl but an unusual dinuclear ionic species, [Ph3PCl+⋯Cl–⋯+CIPPH3]Cl containing long Cl–Cl contacts". Chem. Commun. (22): 2521–2522. doi:10.1039/CC9960002521.
- ↑ S. M. Godfrey; C. A. McAuliffe; J. M. Sheffield (1998). "Structural dependence of the reagent Ph3PCl2 on the nature of the solvent, both in the solid state and in solution; X-ray crystal structure of trigonal bipyramidal Ph3PCl2, the first structurally characterised five-coordinate R3PCl2 compound". Chem. Commun. (8): 921–922. doi:10.1039/a800820e.