உள்ளடக்கத்துக்குச் செல்

முப்பிடாதி அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முப்பிடாதி அம்மன் என்பவர் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இந்த அம்மன் திரிபுரங்களான இரும்பு, வெள்ளி, பொன் நகரங்களை ஆண்ட அரக்கர்களின் காவல் தெய்வமாக இருந்துள்ளாள்.[1]

முப்புரத்தை காவல் காத்தமையால் முப்பிடாதி, முப்புடாதி, முப்பிடாரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.[2][3]

புராணக் கதை

[தொகு]

முப்பிடாரி-பிடாரி அம்மன் கன்னியர்கள் ஏழு பேர்களில் கடைசி பெண் தெய்வமாகும். இவள் சிவனை நோக்கி தவம் செய்து சிவனிடம் 103 சிவலிங்கம் பெற்றார். பின்பு ஒரு நாள் சிவனடியார்கள் சிவனுக்கு அபிசேகம் செய்ய பால் கொண்டு செல்லும் போது அதனை வாங்கிப் பருகினாள். இதனால் கோபம் அடைந்த சிவன் தான் வழங்கிய சிவலிங்கத்தை திருமாலை வாங்கி வர வேண்டினார். திருமாலும் வாங்கச் சென்றார். இதனை அறிந்த அம்பிகை 3 சிவலிங்கத்தை விழுங்கினார். ஆகையால் அம்மனுக்கு 3 முகம் தோன்றியது. இதனால் அம்மனுக்கு முப்பிடாரி அம்மன் என்று பெயர் பெற்றது[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vikatan Correspondent (24 சனவரி 2012). மண் மணக்கும் கதைகள்... அருள் சுரக்கும் சாமிகள்!. சக்தி விகடன்.
  2. சூ நிர்மலா தேவி (1995). முத்தாரம்மன் கதை: நாட்டுப்புறக் கதைப்பாடல். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். p. 239.
  3. டாக்டர் ஆ . தசரதன் (1995). முப்புராதி அம்மன் கதைப்பாடல். தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையம் சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பிடாதி_அம்மன்&oldid=4081548" இலிருந்து மீள்விக்கப்பட்டது