முன் பொறியமைக்கப்பட்ட கட்டிடம்
Appearance
முன் பொறியமைக்கப்பட்ட கட்டிடம் என்பது முற்றிலும் உலோகங்களால் ஆன பகுதிப் பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு நிறுவப்படும் சாய்வுக்கூரை வடிவிலான கட்டிடங்கள் ஆகும். இவை பெரும்பாலும் சேமிப்புக் கிடங்கு, தொழிற்கூடம், விளையாட்டு அரங்கம், உள் விளையாட்டு மைதானம், தேவாலயம், பள்ளிக் கூடம் விமானப் பணிமனை போன்ற அளவில் பெரிய அமைப்புகளுக்காகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.[1][2][3]
சிறப்பம்சங்கள்
[தொகு]- மற்ற வகை கட்டிடங்களை காட்டிலும் விரைவாக கட்டி முடிக்க முடியும்.
- சிறப்பாக அமைப்பியல் பொறியாளரால் வடிவமைக்கப் பட்டால் நிறையை குறைத்து சிக்கனமுள்ளதாக ஆக்கலாம்.
- உலோகக் கூரைத் தகடுகளைத் தவிர்த்து மற்ற பகுதி பொருட்களை கழற்றி வேறு இடங்களுக்கு கொண்டு சென்று அங்கு கட்டிடத்தை அமைக்க முடியும்.
- உலோகப் பகுதிப் பொருட்களை மறு சுழற்சி செய்யலாம்.
- மேற்கூரைகளை மட்டும் பராமரித்தால் போதும்.
பெயர்க்காரணம்
[தொகு]கட்டிடம் முழுவதும் பொறியாளர்களால் முன்திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. பகுதிப் பொருட்கள் (Columns, Rafters, Secondary and Sheeting) பெரும்பாலும் தொழிற் கூடத்தில் வெட்டப்பட்டு தேவையான துளைகள் இடப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. எனவே கட்டிடம் அமைவிடத்தில் வேலை (On-Site Work) குறைவு. கட்டிட பகுதிப் பொருட்களை வரைபடங்களைப் பார்த்து ஒன்றிணைத்தால் (Erection) மட்டும் போதும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Newman, Alexander (2004). Metal Building Systems (2nd ed.). New York: McGraw-Hill Education. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780070463790.
- ↑ National Building Code of Canada 2005
- ↑ "Why PEB is Preferred Choice For Industrial Sheds" (in ஆங்கிலம்). 2022-09-12.