முனி (திரைப்படத் தொடர்)
முனி தொடர் | |
---|---|
தொடரின் இலச்சணை | |
இயக்கம் | ராகவா லாரன்ஸ் |
தயாரிப்பு | சரண் (முனி) ராகவா லாரன்ஸ் (காஞ்சனா) சுரேஷ் (முனி 3: கங்கா) |
கதை | ராகவா லாரன்ஸ் (காஞ்சனா, முனி 3: கங்கா) ரமேஷ் கண்ணா (முனி) (உரையாடல்கள்) |
திரைக்கதை | ராகவா லாரன்ஸ் |
இசை | பரத்வாஜ் (முனி) தமன் (இசையமைப்பாளர்) (காஞ்சனா, முனி 3: கங்கா) லியோன் ஜேம்ஸ் (முனி 3: கங்கா) சத்யா (முனி 3: கங்கா) அஷ்வமித்ரா (முனி 3: கங்கா) |
நடிப்பு | ராகவா லாரன்ஸ் |
ஒளிப்பதிவு | கே. வி. குகன் (முனி) வெற்றி கிருஷ்ணசாமி (காஞ்சனா) ஒளிவீரன் (முனி 3: கங்கா) |
படத்தொகுப்பு | சுரேஷ் (முனி) கிஷோர் (படத்தொகுப்பாளர்) (காஞ்சனா, முனி 3: கங்கா) |
கலையகம் | ஜெமினி ப்ரொடக்சன் (முனி) ராகவேந்திரா ப்ரொடக்சன் (காஞ்சனா, முனி 3: கங்கா) |
விநியோகம் | ஜெமினி ப்ரொடக்சன் (முனி) ஸ்ரீ தேனண்டல் பிலிம்ஸ் (காஞ்சானா) சண் பிக்சர்ஸ் (முனி 3: கங்கா) |
வெளியீடு | 1: மார்ச்சு 9, 2007 2 : சூலை 22, 2011 3 : ஏப்ரல் 17, 2015 : 4 : ஏப்ரல் 19, 2019 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹660 மில்லியன் (US$8.3 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹2.5 பில்லியன் (US$31 மில்லியன்) |
முனி (ஆங்கில மொழி: muni) என்பது தமிழ், நகைச்சுவை, திகில் திரைப்படத் தொடராகும். அனைத்து திரைப்பட தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கும் ராகவா லாரான்சே இதை இயக்கியுள்ளார். இத்தொடரின் முதலாவது திரைப்படம் முனி (2007) என்பதாகும். இரண்டாவது திரைப்படம் காஞ்சனா (2011 திரைப்படம்) (2011) ஆகும். மூன்றாவது திரைப்படம் காஞ்சனா 2: கங்கா (2015) ஆகும். நான்காவது திரைப்படம் காஞ்சனா 3 (2019). அனைத்துத் திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று லாபத்தையும் ஈட்டின.
நான்கு படங்களும் ஒரே விதமான கதைக் கருவையே கொண்டுள்ளன. கோழையான நாயகனை எவ்வாறு பேய் பிடித்து அவர்களைக் கொன்றவர்களை பழிவாங்குகிறது என்பதே கதைக்கரு. ராகவா லாரன்ஸ் மற்றும் கோவை சரளா மட்டுமே இந்தத் தொடரின் எல்லா பாகங்களிலும் தோன்றும் நடிகர்கள்.
திரைப்படங்களின் அடிப்படைகள்
[தொகு]இந்த திரைப்படத்தொடர்கள் ஒவ்வொரு திரைப்படங்களுடன் இணைக்கப்படவில்லை. முதல் திரைப்படத்தில் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் வந்த கதாநாயகன் அடுத்தடுத்த திரைப்படங்களில் ராகவா என்ற காதாபாத்திர பெயரில் நடித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். பேய்கள் மீது பயமுடைய நாயக்கன் மாலை 6 மணிக்கு மேல் வெளியே போகமாட்டான். பேய்கள் அண்டாமல் இருக்க கொத்து தாயத்துகளை இடுப்பில் காட்டுவான், செருப்பை படுக்கையை சுற்றி வைப்பான். இரவில் சிறுநீர் கழிக்கக்கூட தாயைத் (கோவை சரளா) துணைக்கு அழைப்பான். ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரின் காதல் ஆர்வங்கள் வித்தியாசமாக உள்ளது.
எல்லா திரைப்படங்களிலும் கணேஷ்/ராகவா பொதுவாக பேய் இருக்கும் இடத்திற்குச் செல்கிறார். உதாரணமாக, முனியில் அவர்கள் ஒரு புதிய வீட்டிற்குச் செல்கிறார்கள், காஞ்சனாவில் கிரிக்கெட் விளையாட செல்கின்றான் அப்போது பேய் அவனுடன் வருகின்றது. காஞ்சனா 2: கங்கா இல் பேய்களை பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கைவிடப்பட்ட வீட்டிக்கு செல்கின்றான். மற்றும் காஞ்சனா 3 இல், குடும்பத்துடன் ஒரு மரத்தடிக்கு செல்கின்றான். எல்லா கதையிலும் பேய்களுக்கு என்று ஒரு கதை உண்டு மற்றும் அவர்களுக்கும் ஒரு பாடல் காட்சிகள் இருக்கும்.
திரைப்படங்கள்
[தொகு]முனி (2007)
[தொகு]இந்த திரைபபடத்தை முதல் முதலாக கதை எழுதி மற்றும் இயக்கியுள்ளார். கணேஷ் என்கிற சிறு வயதில் இருந்து பேய்க்கதைகள் சொல்லிப் பயமுறுத்தியதால், பெரியவன் ஆன பிறகும் பேய்கள் மீது பயம் கூடுகின்றது இதன் விளைவாக மாலை 6 மணிக்கு மேல் வெளியே போகமாட்டான். எல்லாத்துக்கும் தாயான கண்ணம்மாவை துணைக்கு அழைப்பான். இதே தருணத்தில் பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு மனைவி, அம்மா, அப்பா ஆகியோருடன், ஒரு புது வீட்டுக்குக் குடிபெயர்கிறார்கள். அந்த வீட்டில் முனியாண்டி என்ற பேய் பிடித்து விடுகிறது. அந்தப் பேயை விரட்டும்போது அந்தப் பேய் தன்னை எப்படிக் கொன்றார்கள் என்று தன் கதையைச் சொல்கிறது. அதைக் கேட்டு இரக்கப்படும் கணேஷ், அந்தப் பேய்க்குத் தன் உடலைத் தரச் சம்மதிக்கிறார். தன்னைக் கொன்றவர்களைப் பேய் கொள்ளுகின்றது தான் கதை.[1]
காஞ்சனா (2011)
[தொகு]இந்த திரைபபடத் தையும் நடிகர் ராகவா லாரன்ஸ் என்பவர் இயக்கி, எழுதி மற்றும் தயாரித்துள்ளார். இது ஜூலை 22, 2011 ஆம் ஆண்டில் வெளியானது. பேய் என்ற ஒரு வார்த்தையை கேட்டால் கூட அருகில் யார் இருக்கிறாள்கள் என்று கூட பார்க்காமல் அவர்களின் இடுப்பில் ஏறி இருக்கும் நாயகன் ராகவா உடம்பில் காஞ்சனா என்ற ஒரு திருநங்கையின் பேய் பிடிக்கின்றது. தனக்குள் புகுந்த ஆவி ஒரு நல்ல ஆவி என்று தெரிந்ததும் அந்த ஆவிக்கு உதவி செய்யும் ராகவா. தனது லட்ச்சியத்திற்காக தீயவர்களை காஞ்சனா என்ற ஆவி எப்படி பழி வாங்கியது என்று தான் கதை.[2]
முனி 3: கங்கா|காஞ்சனா 2: கங்கா (2015)
[தொகு]ஒரு சேனலில் வேலைப் பார்க்கும் நந்தினி மீது ஒருதலையாய் காதல். அந்த தொலைக்காட்ச்சி சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த, பேய் இருக்கா இல்லையா என்ற ரியாலிட்டி ஷோவைப் படமாக்க மாமல்லபுரம் கடற்கரைச் சாலை பங்களாவுக்குப் போகிறது நந்தினி மற்றும் ராகவா குழு. அங்கு நந்தினி கையில் ஒரு தாலி கிடைக்க அதை வீட்டிற்கு கொண்டுவருகிறார். அந்த தலையை தேடி வரும் பேய்கள். அந்த பேய்களுக்கு ராகவா எப்படி உதிவி செய்கின்றார் என்பது தான் கதை.[3]
காஞ்சனா 3 (2015)
[தொகு]ராகவாவின் தாத்தாவின் 60வது கல்யாணத்திற்கு செல்லும் லாரன்ஸ் குடும்பம், ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி சாப்பிட முடிவு செய்கின்றனர். அந்த இடத்தில் தான் மிக கொடூரமான பேய் ஒன்றை ஆணியில் அடித்து வைக்க, அதை லாரன்ஸ் யதார்த்தமாக பிடுங்குகின்றார். இவரை கல்யாணம் செய்ய ஆசைப்படும் மூன்று முறைப்பெண்கள். அதன் நடுவில் அந்த பேய் லாரன்ஸுடன் வீட்டிற்கு வந்து, அவர் மேல் ஏறி, தன்னுடைய ஆசையை எப்படி நிறைவேற்றுகின்றது என்பது தான் கதை.
நடிகர்கள்
[தொகு]கதாபாத்திரம் | திரைப்படம் | |||
---|---|---|---|---|
முனி (2007) |
காஞ்சனா (2011) |
காஞ்சனா 2: கங்கா (2015) |
காஞ்சனா 3 (2019) | |
கணேஷ்/ராகவா | ராகவா லாரன்ஸ் | |||
கண்ணம்மா (அம்மா) | கோவை சரளா | |||
அப்பா | வினு சக்ரவர்த்தி | வினு சக்ரவர்த்தி (புகைப்படத்தில் மட்டும்) | ||
அண்ணா | சிறீமன் | சிறீமன் | ||
காமாட்சி (அண்ணி) | தேவதர்சினி | தேவதர்சினி | ||
பேய்கள் | ராஜ்கிரண் | சரத்குமார் | ராகவா லாரன்ஸ் | |
நித்யா மேனன் | அலெக்ஸாண்ட்ரா ரி ஜாவி | |||
காதல் ஆர்வம் | வேதிகா | ராய் லட்சுமி | டாப்சி பன்னு | ஓவியா |
முனி
- கணேஷ் - ராகவா லாரன்ஸ்
- முனியாண்டி - ராஜ்கிரன்
- பிரியா கணேஷ் - வேதிகா
- முனியின் மகள் - ஆஷா
- கணேஷின் தந்தை - வினு சக்ரவர்த்தி
- கணேஷின் தாய் - கோவை சரலா
- மரகா தண்டபாணி - காதல் தண்டபாணி
- ஒப்பந்தக் கொலைகாரன் - ராகுல் தேவ்
- பூசாரி - நாசர்
முனி 2
- ராகவா - ராகவா லாரன்ஸ்
- காஞ்சனா - ஆர்.சரத்குமார்
- பிரியா - லட்சுமி ராய்
- ராகவாவின் சகோதரன் - ஸ்ரீமான்
- எம்.எல்.ஏ சங்கர் - தேவன்
- பாய் - பாபு ஆண்டனி
- ராகவாவின் தாய் - கோவை சரலா
- காமாட்சி (ராகவாவின் அண்ணி)- தேவதர்ஷினி
- போலி பாதிரியார் 1- மனோபாலா
- போலி பாதிரியார் 2- மயில்சாமி
காஞ்சனா 2 (கங்கா)
- ராகவா மற்றும் சிவா - ராகவா லாரன்ஸ் (இரட்டை வேடம்)
- கங்கா - நித்யா மேனன்
- நந்தினி - டாப்ஸி பன்னு
- ராகவாவின் தாய் - கோவை சரலா
- நந்தினியின் மைத்துனர் - ரேணுகா
- மருது - ஜெயபிரகாஷ்
- மருதுவின் உதவியாளர் - ராஜேந்திரன்
- கிரீன் தொலைக்காட்சி தலைவர் - சுஹாசினி மணிரத்னம்
- டாக்டர். பிரசாத் - ஸ்ரீமான்
- வாட்ச்மேன் - மயில்சாமி
- அர்னால்ட் - மனோபாலா
- ஐஸ்வர்யா - ஜாங்கிரி மதுமிதா
- பூஜா - பூஜா ராமச்சந்திரன்
- டாக்டர். பாண்டுரங்கன் - பாண்டு
காஞ்சனா 3
- ராகவா மற்றும் காளி - ராகவா லாரன்ஸ் (இரட்டை வேடம்)
- காவ்யா - ஓவியா
- திவ்யா - நிக்கி தம்போலி
- ரோஸி - அலெக்ஸாண்ட்ரா ரி ஜாவி
- ராகவாவின் தாய் - கோவை சரலா
- கோவிந்தராஜ் - சூரி
- பவானி - கபீர் டுஹான் சிங்
- மூர்த்தி (பவானியின் வலது கை) - ஆத்மா பேட்ரிக்
- அமைச்சர் - தருண் அரோரா
- ராதா (காளியின் தாய்) - அனுபாம குமார்
- ராகவாவின் சகோதரன் - ஸ்ரீமான்
- காமாட்சி (ராகவாவின் அண்ணி)- தேவதர்ஷினி
- ராகவாவின் அண்ணன் மகள்- யுவஸ்ரி லட்சுமி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Review : (2007)". www.sify.com. Archived from the original on 2015-12-24. பார்க்கப்பட்ட நாள் 2019-11-14.
- ↑ "KANCHANA REVIEW - KANCHANA MOVIE REVIEW". behindwoods.com.
- ↑ "Review : Kanchana 2 (2015)". www.sify.com. Archived from the original on 2015-04-17. பார்க்கப்பட்ட நாள் 2019-11-14.