உள்ளடக்கத்துக்குச் செல்

முனாக் கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனாக் கால்வாய்
விவரக்குறிப்புகள்
மடைகள்முனாக் தடுப்பணை கலிங்கு, குப்ரு தடுப்பணை, மண்டோரா தடுப்பணை
வரலாறு
கட்டுமானம் தொடக்கம்2012
புவியியல்
ஆரம்ப புள்ளிமுனாக், கர்னால், அரியானா
இன் கிளைமேற்கு யமுனை கால்வாய்

முனாக் கால்வாய் (Munak canal) என்பது வட இந்தியாவில் அரியானா மற்றும் தில்லி மாநிலங்களில் ஓடும் மேற்கு யமுனா கால்வாயின் ஒரு பகுதியாகும். இது 102 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு நீர்வழிப் பாதையாகும். இந்தக் கால்வாய் அரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள முனாக் ஒழுங்கமைவிலிருந்து யமுனை ஆற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்கிறது. குப்ரு தடுப்பணை மற்றும் மண்டோரா தடுப்பணை வழியாகத் தெற்கு திசை நோக்கிச் சென்று தில்லியின் கைதர்பூரில் முடிவடைகிறது. இது தில்லியின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாகும். 1996ஆம் ஆண்டில் அரியானா மற்றும் தில்லி அரசாங்கங்களுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இந்தக் கால்வாய் 2003 முதல் 2012 வரை தில்லியின் நிதியுதவி அடிப்படையில் அரியானாவால் கட்டப்பட்டது. முதலில் நுண்ணிய அகழியாகவும், கட்டப்பட்ட இந்தக் கால்வாயில் காணப்பட்ட அதிகப்படியான நீர்க் கசிவு காரணமாக இறுதியில் பைஞ்சுதையால் தளமிடப்பட்டது. இதன் மூலம் நாள் ஒன்றிற்கு 80 மில்லியன் கேலன் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.[1][2][3]

இடையூறுகள்

[தொகு]

2016 பிப்ரவரியில், ஜாட்டுகளின் போராட்டத்தின் போது கால்வாய் சேதப்படுத்தப்பட்டது. இது தில்லியில் நீர் நெருக்கடிக்கு வழிவகுத்தது. நீர் விநியோகத்தை மீட்டெடுக்க கால்வாயின் கட்டுப்பாட்டை இந்திய இராணுவம் எடுத்துக் கொண்டது.[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Joshi, Mallica; Halder, Ritam (18 June 2015). "Canal that quenches Delhi's thirst". Hindustan Times. https://www.kent.co.in/pdf/news/Annexure-1.pdf. பார்த்த நாள்: 22 February 2016. 
  2. Lalchandani, Neha (8 Jan 2015). "Delhi Jal Board to ready Munak Canal link in 2 months". http://timesofindia.indiatimes.com/city/delhi/Delhi-Jal-Board-to-ready-Munak-Canal-link-in-2-months/articleshow/45802642.cms. பார்த்த நாள்: 22 February 2016. 
  3. Army guarding Munak canal, 1200 cusec water supplied to Delhi: Haryana tells SC, Firstpost, 25 Feb 2016.
  4. "Army takes control of Munak canal, Delhi water crisis to end today". Hindustan Times. 22 February 2016. பார்க்கப்பட்ட நாள் 22 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனாக்_கால்வாய்&oldid=4060840" இலிருந்து மீள்விக்கப்பட்டது