முட்டையுரு
Appearance
முட்டையுரு (Oval) என்பது முட்டையின் தோற்றத்தை ஒத்த வளைந்த தளவுருவாகும்.[1] முட்டையுருவினுடைய முப்பரிமாண வடிவம் முட்டை வடிவப் பொருள் என அழைக்கப்படும்.[2]
வடிவியலில் முட்டையுரு
[தொகு]வடிவியலில், சில வளையிகளைக் குறிப்பிடுவதற்கு முட்டையுரு எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. முட்டையை ஒத்த வளையி முட்டையுரு என அழைக்கப்படும்.
வடிவியலில் முட்டையுரு பயன்படுத்தப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-
- காசினி முட்டையுரு
- கார்த்தீசியன் முட்டையுரு
தொழினுட்ப வரைதல்
[தொகு]தொழினுட்ப வரைதலில் படத்திலுள்ளவாறு முட்டையுரு வரையப்படும்.
ஆங்கிலத்தில்
[தொகு]முட்டையுரு என்பதன் ஆங்கிலச் சொல்லான Oval என்பது இருபரிமாணத்திலோ முப்பரிமாணத்திலோ உள்ள முட்டையைப் போல் உள்ள உருவத்தை அல்லது நீள்வட்டத்தைக் குறிக்கிறது.[3] சில இடங்களிற்செவ்வகம் ஒன்றினால் இணைக்கப்பட்ட ஈரரை வட்டங்களைக் குறிக்கவும் Oval என்ற ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.