முட்டம் கடற்கரை
முட்டம் கடற்கரை தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.கன்னியாகுமரியில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் முட்டம். இவ்வூரின் கடற்கரை இயற்கை எழில் மிகுந்தது. இங்கு ஒரு கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு கன்னியாகுமரியில் இருந்தும் நாகர்கோவிலில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.
அலையின் வேகம்
[தொகு]கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் அலையின் வேகம் இங்கு அதிகம். பாறைகள் நிறைந்து காணப்படும் இந்தக் கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இயற்கை எழில்
[தொகு]முட்டம் ஒரு அழகிய கடற்கரை கிராமம். மீன்பிடிப்பு தொழிலை மையமாகக் கொண்ட இந்தக் கிராமத்தின் அழகியலை பல தமிழ் திரைப்படங்கள் படம்பிடித்திருக்கின்றன. இது அழகிய நில அமைப்பைக்கொண்டது. பாறைகள் நிறைந்த கடற்கரையும் மேடு பள்ளமான நிலப்பரப்பும் வடமேற்கில் செம்மண் அகழிகளுமாக இதன் இயற்கை எழிலுக்கு அளவேயில்லை.
பழமையான கலங்கரை விளக்கம்
[தொகு]கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சகல புனிதர் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் இங்குள்ளது. பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் இங்குள்ளது.
சின்ன முட்டம்
[தொகு]கன்னியாகுமரிக்கு மிக அருகில் அமைந்துள்ள சின்ன முட்டம் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஏராளமான மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறால் மீன்கள் அதிக அளவில் கிடைப்பது இந்தத் துறைமுகத்தின் சிறப்பு.
முட்டத்தில் எடுக்கப்பட்ட சில திரைப்படங்கள்
[தொகு]- அலைகள் ஓய்வதில்லை
- கடலோரக் கவிதைகள்
- கடல் பூக்கள்
- பகல் நிலவு
- தாய்மேல் ஆணை
- அம்மன்கோயில் கிழக்காலே
- உயிரே உனக்காக
- நிலாவே வா
- பாடு நிலாவே
- நான் பாடும் பாடல்
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
- மஞ்சள் நிலா
- சின்ன மேடம்
படத்தொகுப்பு
[தொகு]-
வேகமாய் மோதும் அலைகள்
-
சிவந்த மண் பிளவுகள்
-
கலங்கரை விளக்கம்
-
கடற்கரை பாறைகள்