முக்தா இராமசாமி
முக்தா இராமசாமி | |
---|---|
பிறப்பு | வெங்கடாச்சாரி இராமசாமி 1927[1] |
இறப்பு | 1988 |
பணி | திரைப்பட தயாரிப்பாளர், முக்தா பிலிம்ஸ் |
பிள்ளைகள் | முக்தா ஆர். கோவிந்த்[2] |
முக்தா இராமசாமி (Muktha Ramaswamy) என்பவர் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளராவார். இவர் பெரும்பாலும் தமிழ் திரையுலகில் பணிபுரிந்துள்ளார். இவர் பிரபல இயக்குனரான முக்தா சீனிவாசனின் அண்ணன் ஆவார்.
வாழ்க்கை
[தொகு]இவர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின், பாபநாசம் அருகே மணப்புரம் என்ற கிராமத்தில் வெங்கடச்சாரியார், செல்லம்மாள் இணையருக்கு மகன்களாகப் பிறந்தார். 1945 இல் ராமசாமி மாடர்ன் தியேட்டர்சில் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தார். தட்டச்சராக இருந்த நிலையில் டி. ஆர். சுந்தரத்தின் காரியதரிசி என்ற பொறுப்புக்கு உயர்ந்தார். தன் சகோதிரர் சீனிவாசனை அழைத்துவந்து டி. ஆர் சுந்தரத்திடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டார். பிறகு தனியாக படங்களை இயக்கத் துவங்கினார் சீனிவாசன். பிறகு சகோதிரர்கள் இருவரும் இணைந்து இராமசாமியின் மகளான முக்தா பெயரில் 1960 இல் ‘முக்தா பிலிம்ஸ்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினர். முதல் படமாக பனித்திரை படத்தை தயாரித்து முக்தா சீனிவாசன் இயக்கினார். அதன் பிறகு இவர்களின் பெயரோடு முக்தா என்ற பெயர் இணைந்தது.[3]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1961 | பனித்திரை | தமிழ் | |
1967 | தவப்புதல்வன் | தமிழ் | |
1968 | பொம்மலாட்டம் | தமிழ் | |
1969 | நிறை குடம் | தமிழ் | |
1971 | அருணோதயம் | தமிழ் | |
1973 | அன்பைத்தேடி | தமிழ் | |
1978 | அந்தமான் காதலி | தமிழ் | |
1979 | இமயம் | தமிழ் | |
1982 | சிம்லா ஸ்பெஷல் | தமிழ் | |
1982 | பரீட்சைக்கு நேரமாச்சு | தமிழ் | |
1983 | சிவப்பு சூரியன் | தமிழ் | |
1984 | இருமேதைகள் | தமிழ் | |
1985 | ஓரு மலரின் பயணம் | தமிழ் | |
1988 | கதாநாயகன் | தமிழ் |
குறிப்புகள்
[தொகு]- ↑ "Film-maker, writer and a diehard book lover - The Hindu". thehindu.com. Retrieved 2014-11-16.
- ↑ "Srinivasan is back in the business with Muktha Govind". kollyinsider.com. Retrieved 2014-11-16.
- ↑ முக்தா பிலிம்ஸ் 60: திரையுலகில் ஒரு நிறைகுடம்! இந்து தமிழ், 2019, திசம்பர், 20
வெளி இணைப்புகள்
[தொகு]- Muktha Ramaswamy
- "Muktha Ramasami Filmography". apunkachoice.com. Archived from the original on 2014-11-18. Retrieved 2014-11-16.