உள்ளடக்கத்துக்குச் செல்

முகமது அனீபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது அனீபா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2024 (2024-06)
முன்னையவர்ஜம்யாங் செரிங் நம்கியால்
தொகுதிஇலடாக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலடாக்கு, இந்தியா
அரசியல் கட்சிIndependent

ஹாஜி முகமது அனீபா (Mohmad Haneefa) என்பவர் இலடாக்கு பகுதி கார்கில் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒன்றிய பிரதேசமான லடாக்கில் உள்ள இலடாக்கு மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18ஆவது மக்களவை உறுப்பினராக உள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2023 கார்கில் தேர்தலில், அனீபா கார்கிலில் உள்ள எல்ஏஎச்டிசி-யில் பரோ தொகுதியில் காதிம் உசைனுக்கு எதிராகப் போட்டியிட்டார். இதில் இவர் 66 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[1] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில், அனீபா லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இவர் இந்த தேர்தலில் வெற்றிபெற்று 18ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செரிங் நாம்க்யால் மற்றும் தாசி கியால்சன் ஆகியோரை தோற்கடித்தார். இவர்கள் இருவரும் முறையே இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாஜக கட்சியினைச் சார்ந்தவர்கள்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2023 LAHDC Kargil election results". LAHDC Kargil. பார்க்கப்பட்ட நாள் 8 October 2023.
  2. "Independent candidate Mohmad Haneefa wins Ladakh Lok Sabha constituency". The Telegraph (India). 4 June 2024.
  3. "Lok Sabha elections 2024: Independent candidate wins Ladakh constituency". Business Standard. 4 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அனீபா&oldid=3998575" இலிருந்து மீள்விக்கப்பட்டது