உள்ளடக்கத்துக்குச் செல்

மீசோதெரபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீசோதெரப்பி (mesotherapy) என்பது அறுவை சிகிச்சை அல்லாத ஒரு அழகுமுறை சிகிச்சையாகும். இந்த சிகிச்சை முறையில் மருந்துப் பொருட்கள், ஓமியோபதி, தாவர சாறு, வைட்டமின்கள் மற்றும் இதர சிகிச்சைக்குரிய பொருட்கள் தோலடுக்கிற்கு கீழுள்ள கொழுப்பில் செலுத்தப்படும். இதனை பல சிறிய மருத்துவ ஊசிகள் மூலம் செயல்படுத்துவர். மீசோதெரபி மருத்துவ முறை, தோலின் கொழுப்பு சார்ந்த கொழுப்பு செல்களையே இலக்காகக் கொண்டு செயல்படும்.[1]

மீசோதெரபி எனும் ஆங்கில வார்த்தை மீசோஸ், தெரபியா எனும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது. மீசோஸ் என்பதற்கு ‘மத்தியில்’ எனவும், தெரபியா என்பதற்கு ‘மருத்துவ சிகிச்சை’ எனவும் பெயர்.

சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பொருட்கள்

[தொகு]

ஹையலூரோனிக் அமிலம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, அமினோ அமிலங்கள் அல்லது பிற வைட்டமின்கள், கனிமங்கள் போன்ற ஒன்றாவது கலந்திருக்கும்படி தூய்மையான மருத்துவப் பொருட்கள் பயன்படுத்தப்படும்.[2]

திறனாய்வு

[தொகு]

மீசோதெரபி சிகிச்சை முறை ஐரோப்பா நாடுகள், தென் அமெரிக்கா, சமீப காலத்தில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துகின்றனர். இருப்பினும் பல மருத்துவர்கள் மீசோதெரபி முறையின் பலாபலன்கள் அனைத்தையும் கற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதன் முழுப்பலன்களைப் பற்றி முற்றிலுமாகத் தெரியவில்லை. மீசோதெரபி தரமான மற்றும் நிலையான சிகிச்சை பயிற்சிகளில் பாடமாக இல்லாததே மீசோதெரபியில் இருக்கும் முதன்மை பிரச்சினையாகும். இருப்பினும் தசைநார் முன்னேற்றம், பல் சிகிச்சை முறைகள், புற்றுநோய் சிகிச்சை முறைகள், கீல்வாதம், நிணநீர் தேக்க வீக்கம் மற்றும் சிரை தேக்க நிலை நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் மீசோதெரபி சிகிச்சை முறைகளின் செயல்முறை விளக்கங்கள் மற்றும் சிகிச்சைச் செயல்பாடுகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.[3] மீசோதெரபி குறித்து பல்வேறு வகையான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அத்துடன் மீசோதெரபியில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான படிப்பு முறைகளும் முன்னேறியுள்ளன.[3]

தென்மேற்கு மருத்துவ மையம், டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சைப் பிரிவின் தலைவரான ரோட் ரோஹ்ரிச் அவர்களின் மீசோதெரபி மீதான கூற்று, இந்த விவாதத்திற்கு மற்றொரு கைப்பிடியாக கிடைத்தது. அவரின் கூற்றுப்படி இந்த மீசோதெரபி செயல்படுவதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை. அமெரிக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக் குழு மீசோதெரபி பற்றி எதிர்மறையான கருத்துக்களை வழங்கினர். ஏனெனில் மீசோதெரபி ஒரு அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறை, அதனால் அறுவை சிகிச்சை மூலம் தரக்கூடிய அதாவது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறை மூலம் தரக்கூடிய பலன்களை முழுமையாகத் தர இயலாது என அவர்கள் நம்பினர்.

அமெரிக்க மருந்துப் பொருட்கள் ஆலோசனைக் குழுவினால் மீசோதெரபிக்காக ஆராய்ச்சி மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க இயலவில்லை. அவர்கள் பலதரப்பட்ட மருந்துகளை பரிசோதித்து மருத்துவ விதிகளுக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்பட்டது. குறுகிய காலத்திலேயே மீசோதெரபிக்கான செய்முறைகளுக்கு அனுமதி வழங்கும் நிலை வந்தது. அதேநேரத்தில் மருந்துப் பொருள் கட்டுப்பாட்டுக் குழு உணவுகள், உணவுத்திட்டம், மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள், இரத்த பொருட்கள், கதிர்வீச்சு தன்மை கொண்ட சாதனங்கள், கால்நடை பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் போன்றவற்றிற்கான அனுமதி வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

சருமம் தொடர்பான அமெரிக்க குழுவின் சார்பில் பேசிய ராபின் ஆஷினாஃப், “ஒரு எளிமையான மருத்துவ ஊசி மக்களுக்கு தவறுதலான நம்பிக்கையினை விதைக்கும். அனைவரும் உடனடியாக சரிசெய்யக்கூடிய வழியினைத் தேடுகின்றனர். கொழுப்பு அல்லது கொழுப்பு படிவுகள் அல்லது கொழுப்பு செல்லுலாய்டுகள் போன்றவை சம்பந்தப்பட்ட சிகிச்சைகளில் உடனடியாக சரிசெய்யும் விளைவுகள் ஏதுமில்லை”. 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சரும அறுவை சிகிச்சையாளர்களின் அமெரிக்க குழுவானது தனது உறுப்பினர்களிடத்தில் குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே மீசோதெரபி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியது.[4]

தற்போது, தெற்கு அமெரிக்க நாடுகளில் மீசோதெரபி தடைசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவினைவிட தளர்த்தப்பட்ட மருத்துவக் கட்டுப்பாடுகள் கொண்டுள்ள பிரேசில் நாட்டில்கூட இது சம்பந்தப்பட்ட மருத்துவ பொருட்களை தடைசெய்துள்ளது.[5]

ஆஸ்திரேலிய சுகாதாரக் குழு, இந்த மீசோதெரபிக்கு பதிலான வேறொரு சிகிச்சை முறையினை மேம்படுத்தி வருகிறது. பாக்டீரியா தொற்று, தொடை, அடிவயிறு, தோள், முகம் மற்றும் கழுத்து போன்ற இடங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் ஆஸ்திரேலிய சுகாதாரக் குழு இம்முடிவினை எடுத்தது.[6]

பிரஞ்சு நாட்டு சில சிகிச்சை முறையினரால், சிகிச்சை பெறுபவர்கள் சிலருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் மீசோதெரபி சிகிச்சை முறையினை பிரான்ஸ் அரசு ஏப்ரல் 2011 இல் தடை செய்தது. இந்த தடை ஜூன் 2011 இல், பிரஞ்சு மாநிலக் குழுவினால் நீக்கப்பட்டது. ஏனெனில் இவ்வாறான கோளாறுகள் ஏற்பட்டதற்கு மீசோதெரபி சிகிச்சை முறை காரணமல்ல, அதில் கூறப்பட்டவாறு முறையான சுகாதாரமான சிகிச்சை முறைகளை கையாளாமல் செயல்பட்டதே காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.[7]

எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. லேசான வீக்கம் மற்றும் சிவப்பு நிறத்திலான தோற்றம் தோன்றும். மருத்துவ ஊசி செலுத்தப்பட்ட சருமத்தில் தோல் நசுக்கப்பட்டிருப்பின் அந்த தாக்கம் தீர ஒரு வாரம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rittes, PG; Rittes, JC; Carriel, Amary MF (2006). "Injection of phosphatidylcholine in fat tissue: experimental study of local action in rabbits". Aesthetic Plast Surg. 30 (Jul-Aug;30(4):474-8.): 474–8. doi:10.1007/s00266-005-0170-5. பப்மெட்:16858660. 
  2. "Mesotherapy". drbatul.com. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
  3. 3.0 3.1 Rotunda, Adam; Kolodney, Michael (April 2006). Mesotherapy and Phosphatidylcholine Injections: Historical Clarification and Review. 32. பக். 465–480. doi:10.1111/j.1524-4725.2006.32100.x. பப்மெட்:16681654. http://www.mesotherapyworldwide.com/images/pdf/Mesotherapy%20Article_Historical%20Review.pdf. பார்த்த நாள்: 12 May 2016. 
  4. Matarasso, Seth; Butterwick, Kimberly; Goldberg, David; Lawrence, Naomi; Mandy, Stephen; Sadick, Neil; Wexler, Patricia; Rotunda, Adam (January 2006). "Technology report: Mesotherapy". American Society for Dermatological Surgery. Archived from the original on 9 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Puente, Maria (August 4, 2004). "Critics say mesotherapy offers slim chance". USA Today. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
  6. "Cellulite therapy under investigation". ABC News.
  7. Conseil d'État : Ordonnance du 17 juin 2011, SARL Cellusonic et autres, Madame Valérie A. et autres

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீசோதெரபி&oldid=3567733" இலிருந்து மீள்விக்கப்பட்டது