உள்ளடக்கத்துக்குச் செல்

மிஸ்வாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரம்பரியமான மிஸ்வாக் குச்சிகள்.இரு ஓரங்களிலும் உள்ள மென்மையாக்கப்பட்ட முட்கள் பற்களை சுத்தமாக்க பயன்படுத்தலாம்.

மிஸ்வாக் (miswak, அரபு மொழி: سواك அல்லது مسواك, சிவாக் அல்லது செவாக்) என்பது உகாய் மரத்தினால் (அரபு மொழியில் அராக் என அழைக்கப்படும்) ஆன பற்களை சுத்தப்படுத்தும் கிளை ஆகும். இது நவீன பற்தூரிகைக்கு பாரம்பரியமானதும் மற்றும் இயற்கையானதுமான மாற்றீடு ஆகும், இது நீண்ட, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றையும் மற்றும் அதன் மருத்துவ நலன்களுக்கும் புகழ்பெற்றது. இது 7000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[1] மிஸ்வாக்கின் பண்புகள் பின்வருமாறு விபரிக்கப்படுகிறது: "பற்தகடு உருவாக்கத்தையும் அதன் செயற்பாட்டையும் கட்டுப்படுத்தக்கூடிய அதன் பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கைக்கு அப்பால், பற்சுகாதாரத்திற்கு இயற்கை பற்தூரிகையாக இதனை வினைத்திறனாக பயன்படுத்தலாம். இப்படியான குச்சிகள் மலிவானவை, பயனுள்ளவை, பொதுவானவை, எளிதில் கிடைக்ககூடியவை. மற்றும் பல மருத்துவ பண்புகளையும் கொண்டுள்ளது."[2] இவ் அம்சங்கள் இசுலாமிய சுகாதார நீதி பரிபாலனத்தில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மிஸ்வாக் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் முதன்மையானவை. அவை பொதுவாக அராபியத் தீபகற்பம், ஆப்பிரிக்காவின் கொம்பு, வடக்கு ஆப்பிரிக்கா, சகேலின் பாகங்கள், இந்தியத் துணைக்கண்டம், நடு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா போன்ற இடங்களில் பயன்படுத்தபடுகிறது. மலேசியாவில் மிஸ்வாக் "காயு சுகி" என அழைக்கப்படும் (பற் சுத்தம் செய்யும் குச்சிக்குரிய மலாய் மொழி).

அறிவியல்

[தொகு]

ஆய்வுகள்

[தொகு]

2003 அறிவியல் ஆய்வின் படி வழக்கமான பற் தூரிகைகளுடன் மிஸ்வாக் ஐ ஒப்பீடு செய்யும் போது தெளிவாக மிஸ்வாக் இற்கே சாதகமான முடிவு வந்தது,அவற்றினால் எவ்வாறு பற்களை சுத்தப்படுத்தலாம் என்பதற்குரிய முறையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.[3] எனினும் புள்ளிவிவர முக்கியத்துவம் பற்றி கேள்வி எழுப்ப பட்டாலும் ,ஆய்வின் மாதிரி அளவு பதினைந்து பேர் மட்டுமே. 2004 இல் எதிர் பற் சிதைவு விளைவுடன் சம்பந்தப்பட்ட மற்றொரு ஆய்வு பற் தூரிகைகளுடன் மிஸ்வாக் ஐ ஒப்பிட்டு செய்யப்பட்டது ,இதன் மாதிரி அளவு 40 பேர்கள் ஆகும். மிஸ்வாக் இன் விளைவுகள் அதிகமாக குறிப்பிட கூடியதாகவும் நன்மை பயக்ககூடியதாகவும் உள்ளது .[4] பற் தூரிகைகளுடன் ஒப்பிடும் போது மிஸ்வாக் ஐ பயன்படுத்துவதால் ப்லகுஎ (பற்களில் ஏற்படக்கூடிய படிவு)(p < 0.001 ) மற்றும் கின்கிவல் (p < 0.01) சுட்டிகளில் குறிபிடத்தக்க அளவு குறைப்பு ஏற்படுகிறது என இன்னுமொரு ஒப்பீட்டு ஆய்வு கூறுகிறது.[5] 1986 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO ) மிஸ்வாக் பயன்படுத்துவதை பரிந்துரை செய்தது,அனால் 2000 ஆம் ஆண்டில் வாய் சுகாதாரத்தின் சர்வேதேச ஒருமித்த அறிக்கை மிஸ்வாக் பயன்பாட்டின் விளைவை அறிய மேலதிக ஆராய்ச்சி தேவை என கூறியது.[6] இதில் சில மேலதிக ஆராய்ச்சிக்கு உட்பட்டுள்ளது. இவற்றின் சனத்தொகை 203,மற்றும் இதன் முடிவுகளின் படி,சூடான் சனத்தொகையின் பல்லைச்சுற்றிய நிலை, பற்தூரிகை பயன்படுத்துபவர்களை விட மிஸ்வாக் பயன்படுத்துபவர்களுக்கு நன்றாக உள்ளது".[7] பல்லைச்சுற்றிய பாதுகாப்பிற்கு தேவையான மட்டம் ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புக்களுடன் ஒப்பிடுகையில் தேர்ந்து எடுக்கப்பட்ட மாதிரியின் மட்டம் குறைவு என 480 வயது வந்த சவூதி அரேபியர்களை மாதிரிகளாக கொண்ட மற்றொரு ஒப்பீட்டு ஆய்வு கூறுகிறது. அடிக்கடி மிஸ்வாக் பயன்படுத்துவது சிகிச்சைக்கான தேவையை குறைப்பதுடன் தொடர்புடையது ".[8]

டாக்டர் ரமி முஹம்மத் டைஅபி,[10]மிஸ்வாக் சுகாதாரத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் மற்றும் புகை பிடிப்பவர்களின் போதை எதிர்ப்பு விளைவுகள் (குணப்படுத்தும் மற்றும் தடுக்கும் பக்கங்கள்) என்பவற்றை அறிவதற்கு, இவர் 17 வருடத்திற்கு மேல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார், அவருடைய கடந்த வெளியீடு அறிவியல் துறை மற்றும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளது:

மிஸ்வாக் சாரம் எதிர் வாய் கிருமிநாசினிகள்

[தொகு]

ஏனைய வாய்வழி கிருமிநாசினிகளான டிரைக்குளோசான் மற்றும் க்லோர்ஹெக்ஷிடின் க்ளுகோநெட் உடன் ஒப்பிடும் போது உகாய் சாரம் குறைந்தளவு வாய்வழி கிருமிநாசினி செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றது.[9][10]

மார்க்க பரிந்துரைகள்

[தொகு]
மிஸ்வாக் குச்சிகளின் கட்டு.

ஹதீஸ் (நபிகள் நாயகம் முகம்மது நபி சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள், விமர்சனப் பதிவுகளைக் கொண்ட தொகுதி ஆகும்) இல் மிஸ்வாக் இன் பயன்பாடு அடிக்கடி வலியுறுத்தப்பட்டிருக்கின்றது  . மிஸ்வாக் பயன்படுத்துவதற்கு பரிந்துரைத்துள்ள சந்தர்ப்பங்கள் ஆவன,மார்க்க கடமைகளுக்கு முன்னர்,இன்னொரு நபரின் வீட்டிற்கு நுழையும் முன்,ஒரு பயணத்திற்கு செல்லும் முன் மற்றும் சென்ற பின்,வெள்ளிக்கிழமை நாட்களில் ,[11] தூங்குவதற்கு முன் மற்றும் தூங்கி எழுந்த பின் ,பசி அல்லது தாகம் ஏற்படும் போது மற்றும் நல்ல ஒன்றுகூடலிற்கு நுழையும் முன்.

பல் ஈறுகளை பலப்படுத்துதல்,பற்சொத்தையை தடுத்தல்,பல் வலியை இல்லாமற் செய்தல் போன்றவற்றிற்கு மேலதிகமாக, மிஸ்வாக் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பற்சொத்தையை மேலும் வராமல் தடுக்கின்றது. இதுமட்டுமல்லாமல்,அது வாயில் நறுமணத்தை உண்டாக்குகின்றது, வாய் துர்நாற்றத்தை இல்லாமற் செய்கின்றது மற்றும் சுவை அரும்புகளின் உணர்திறனை அதிகரிப்பதுடன் சுத்தமான பற்களை தருகின்றது.

மிஸ்வாக் பற்றிய ஹதீஸ்கள்

[தொகு]

மிஸ்வாக் பயன்படுத்துவதை முகம்மது நபி பல தடவைகள் பரிந்துரைத்துள்ளார்கள்.அவர்கள் அதன் சிறப்பம்சங்கள் பற்றி பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள் :[12][13]

பராமரிப்பு

[தொகு]
மிஸ்வாக் குச்சி.

மிஸ்வாக் ஐ தேர்ந்தெடுக்கும் போது அது ஒரு கை சாண் வரை இருக்க வேண்டும்.அது வரண்டு காணப்படும் நிலையில் அதன் இரு ஓரங்களையும் மென்மையாக்குவதற்காக பன்னீர் இல் அமிழ்த்தி எடுக்க வேண்டும்.சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக அதன் ஓரங்கள் புதிதாக வெட்டுப்பட வேண்டும் அத்துடன் கழிவறை அல்லது கழுவு கிண்ணத்திற்கு அருகாமையில் வைக்கக்கூடாது . பற்தூரிகை உகாய் மரத்தின் கிளைகளில் இருந்து வெட்டாமல் வேர்களில் இருந்து வெட்டப்படுகிறது.வேர்கள் கிளைகளை விட ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளகூடியது என்பதே இதற்கான காரணம்.இது நீண்ட நாள் பாவனைக்கு வழிவகுக்கின்றது.

கொண்டு செல்லுதல்

[தொகு]

பல நிறுவனங்கள் மிஸ்வாக் ஐ கொண்டு செல்வதற்கு விஷேட பெட்டிகளை தயாரிக்கின்றது. இவ்வகையான நிறுவனங்கள் தானாகவே மிஸ்வாக் ஐ உற்பத்தி செய்கின்றன.மிஸ்வாக் இன் புத்துணர்ச்சியை பாதுகாப்பதற்கு இவ்வகையான பெட்டிகள் உதவுகின்றன.பிளாஸ்டிக் பற்தூரிகை பெட்டிகள் அநேகமான மருந்து கடைகளில் காணப்படுவதுடன் அவை மிஸ்வாக் ஐ கொண்டு செல்ல பயன்படுத்தப்படலம் .

குறிப்புகள்

[தொகு]
  1. Ra'ed I. Al Sadhan, Khalid Almas (1999). "Miswak (chewing Stick): A Cultural And Scientific Heritage.". Saudi Dental Journal 11 (2): 80–88. 
  2. Al lafi T, Ababneh H (1995). "The effect of the extract of the miswak (chewing sticks) used in Jordan and the Middle East on oral bacteria.". International Dental Journal 45 (3): 218–222. பப்மெட்:7558361. http://europepmc.org/abstract/med/7558361
  3. Al-Otaibi M, Al-Harthy M, Soder B, Gustafsson A, Angmar-Mansson B. (2003). "Comparative effect of chewing sticks and toothbrushing on plaque removal and gingival health.". Oral Health Prev Dent 1 (4): 301–7. பப்மெட்:15643758. 
  4. Almas K, Al-Zeid Z (2004). "The immediate antimicrobial effect of a toothbrush and miswak on cariogenic bacteria: a clinical study.". The journal of contemporary dental practice 5 (1): 105–114. பப்மெட்:14973564. 
  5. al-Otaibi M. (2004). "The miswak (chewing stick) and oral health. Studies on oral hygiene practices of urban Saudi Arabians.". Swedish dental journal. Supplement (167): 2–75. பன்னாட்டுத் தர தொடர் எண்:0348-6672. பப்மெட்:15224592. 
  6. Undersøkelse av en aktuell eldgammel munnrengjøringsmetode in Norwegian
  7. http://informahealthcare.com/doi/abs/10.1080/000163500429398
  8. al-Khateeb TL, O'Mullane DM, Whelton H, Sulaiman MI. (2003). "Periodontal treatment needs among Saudi Arabian adults and their relationship to the use of the Miswak.". Community dental health 8 (4): 323–328. பன்னாட்டுத் தர தொடர் எண்:0265-539X. பப்மெட்:1790476. 
  9. Almas, K. (August 2002). "The effect of Salvadora persica extract (miswak) and chlorhexidine gluconate on human dentin: a SEM study.". J Contemp Dent Pract. 3 (3): 27–35. பப்மெட்:12239575. 
  10. Almas, K; Skaug, N; Ahmad, I. (February 2005). "An in vitro antimicrobial comparison of miswak extract with commercially available non-alcohol mouthrinses.". Int J Dent Hyg. 3 (1): 18–24. doi:10.1111/j.1601-5037.2004.00111.x. பப்மெட்:16451373. 
  11. "http://hadith.al-islam.com/Display/hier.asp?". Archived from the original on 2007-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-04-20. {{cite web}}: External link in |title= (help)
  12. "Miswak" at sunnah.com.
  13. "Siwak" at searchtruth.com.

மேலதிக வாசிப்பு

[தொகு]
  • Islamic Research on Miswak (Dr. Al Sahli)
  • Khan, Tehmeena, Toothbrush (Miswak), in Muhammad in History, Thought, and Culture: An Encyclopedia of the Prophet of God (2 vols.), Edited by C. Fitzpatrick and A. Walker, Santa Barbara, ABC-CLIO, 2014.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்வாக்&oldid=3765920" இலிருந்து மீள்விக்கப்பட்டது