மில்லனின் காரணி
மில்லனின் காரணி (Millon's Reagent) கரையக்கூடிய புரதங்களைக் கண்டறியப் பயன்படும் பகுப்பாய்வு வேதிக்காரணியாகும். சோதனைக்குட்படுத்தும் கரைசலில் இந்த வேதிக்காரணியை ஒரு சில சொட்டுக்கள் சேர்த்து மிதமாக வெப்பப்படுத்தப்படுகிறது. செம்பழுப்பு நிற வீழ்படிவு அல்லது நிற மாற்றமானது, அனைத்துப் புரதங்களிலும் காணப்படும் டைரோசின் எச்சத்தின் இருப்பினை அடையாளம் காட்டுகிறது.[1]
மில்லனின் சோதனை புரதத்தை மட்டும் கண்டறிவதற்கான சோதனை அல்ல. (இச்சோதனை பீனாலிக் சேர்மங்களையும் கண்டறிய உதவுகிறது). ஆகவே, புரதங்களின் இருப்பினை உறுதி செய்ய பிற சோதனைகளான பையூரெட் மற்றும் நின்ஐட்ரின் சோதனைகளையும் பயன்படுத்த வேண்டும். இது உலோக பாதரசத்தை, நைட்ரிக் அமிலத்தில் கரைத்து பின்னர் நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் பெறப்படுகிறது. இந்தச் சோதனையானது, பிரஞ்சு வேதியியலாளர், அகசுடே நிக்கோலசு யூஜின் மில்லன் (1812–1867) என்பவரால் உருவாக்கப்பட்டது.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Walsh, Edward O'Farrell (1961). An Introduction to Biochemistry. London: The English Universities Press Ltd. pp. 406–407. இணையக் கணினி நூலக மைய எண் 421450365.
{{cite book}}
: More than one of|OCLC=
and|oclc=
specified (help)