உள்ளடக்கத்துக்குச் செல்

மிருதுவான மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்ரோமா லேகோபஸ்மிருதுவான மரம்

ஆக்ரோமா பிரமிடேல் (Ochroma pyramidale) , பொதுவாக பால்சா மரம்[1] அல்லது தக்கை மரம்[2] என்றும் அழைக்கப்படும் இது அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெரிய, வேகமாக வளரும் மரமாகும்.[3] இது ஆக்ரோமா இனத்தின் ஒரே ஒரு இன மரமாக உள்ளது.

மரத்தின் அமைவு

[தொகு]

இது உலகில் உள்ள மரங்களில் மிகவும் லேசான மரம். மரங்கள் பொதுவாக 30 முதல் 40 ஆண்டுகளுக்கு மேல் வாழாது.[4] இது 60 முதல் 70 அடி உயரம் வளரக்கூடியது. மிகவும் வேகமாக இம்மரம் வளரும். இதன் மரச் சோறு தக்கை போன்று இருக்கும். இதனால் இம்மரத்தை கட்டுமரம் செய்வதற்கும், முதல் உதவிக்குப் பயன்படும் மிதவையாகவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் விமானம் கட்டுவதற்கும், சுரங்கங்களில் மின் தடையாகவும் பயன்படுத்துகிறார்கள்.

இம்மரம் மத்திய அமெரிக்காவில் வளர்கிறது. இம்மரத்தில் பழுப்பு நிற வெள்ளை பூக்கள் வருகிறது. இம்மரத்தில் வரும் பழுப்பு நிற காய்கள் பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கும். இதன் உள்ளே உள்ள பஞ்சு மினுமினுப்பாகவும் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இப்பஞ்சு தலையணை செய்வதற்குப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "balsa, n.". OED Online. March 2013. Oxford University Press. 9 May 2013
  2. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
  3. "Search results for Ochroma". The Plant List. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
  4. Angier, N.; Ziegler, C. (2011). "Treetop happy hour". National Geographic 219 (5): 130–143. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருதுவான_மரம்&oldid=4053245" இலிருந்து மீள்விக்கப்பட்டது