மிதா வசிஷ்ட்
மிதா வசிஷ்ட் | |
---|---|
2019இல் ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் மிதா வசிஷ்ட் | |
பிறப்பு | 2 நவம்பர் 1967[1] புனே, மகாராட்டிரம், இந்தியா |
மற்ற பெயர்கள் | மீதா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1987–தற்போது |
விருதுகள் | ஸ்கிரீன் விருது |
மிதா வசிஷ்ட் (Mita Vashisht) (பிறப்பு 2 நவம்பர் 1967) ஓர் இந்திய நடிகையாவார். திரை, மேடை மற்றும் தொலைக்காட்சியில் தனது பணிக்காக அறியப்பட்ட இவர், பரந்த அளவிலான பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது மிக முக்கியமான தோற்றங்களில் அறிவியல் புனைகதை தொலைக்காட்சித் தொடரான ஸ்பேஸ் சிட்டி சிக்மா (1989-1991), பச்பன் காம்பே லால் தீவாரின், ஸ்வாபிமான், ஆலன் (கிர்தார்) கஹானி கர் கர் கி (திரிஷ்னா) மற்றும் காலா தீகா (ஜெதி மா) போன்ற பாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்கள் அடங்கும்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]மிதா 1967 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள புனேவில் இந்திய இராணுவத்தில் இருந்து கர்னலாக ஓய்வு பெற்ற கேப்டன் ராஜேஷ்வர் தத் வசிஷ்ட் மற்றும் ஒரு ஆசிரியரும் பாடகியுமான மீனாட்சி மேத்தா (நீ) வசிஷ்ட் ஆகியோரின் மகளாகப் பிறந்தார்.
சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், 1987 இல் தில்லியின் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[3] பல ஆண்டுகளாக (1990-2010) சில முதன்மை வடிவமைப்புகளுக்கு கற்பிக்கும் நிறுவங்களில் வருகைதரும் ஆசிரியராக இருந்தார். இந்தியாவின் திரைப்பட மற்றும் நாடக நிறுவனங்கள் - தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி (தில்லி), FTII (புனே), NSD (டெல்லி) மற்றும் NID (அகமதாபாத்). ஐக்கிய ராச்சியத்தின் இலண்டன், பர்மிங்காம், லீசெஸ்டர், சிரியாவின் டமாஸ்கஸில் போன்ற நகரங்களில் நாடகப் பட்டறைகளையும் நடத்தியுள்ளார். மாணவர்களுக்கு ஆடை அலங்கார வடிவமைப்பு, திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு, நாடக நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பிக்கிறார்.[4] இவர் திரைப்பட தயாரிப்பாளர் அனுப் சிங்கை மணந்தார்.
திரையரங்கம்
[தொகு]காஷ்மீரின் ஆன்மீகவாதியும் பெண் மாயவாதியும் கவிஞருமான இலல்லேசுவரியின் வாழ்க்கை மற்றும் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட லால் டெட் என்ற 75 நிமிட தனி நாடக நிகழ்ச்சியில் நடித்துள்ளார்.[5] லால் டெட் நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பின்வரும் தேசிய/சர்வதேச நாடக விழாக்களிலும் நிகழ்த்தப்பட்டுள்ளன.
சான்றுகள்
[தொகு]- ↑ Kolwankar, Gayatri (26 April 2016). "TV actors and their birthday bash pictures". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. p. 15. பார்க்கப்பட்ட நாள் 30 August 2016.
- ↑ "Mita Vashisht: My new show Kaala Teeka launches on my birthday 2nd November - Times of India". The Times of India இம் மூலத்தில் இருந்து 29 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180329075644/https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Mita-Vashisht-My-new-show-Kaala-Teeka-launches-on-my-birthday-2nd-November/articleshow/49631202.cms.
- ↑ Ferral, Glacxy (25 November 2008). "Mita reveals it all". The Times of India. Archived from the original on 13 January 2016. பார்க்கப்பட்ட நாள் 30 August 2016.
- ↑ "For the love of the stage". The Hindu. 11 November 2012. Archived from the original on 13 January 2016. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.
- ↑ Meenakshi Shedde (14 November 2001). "How theatre can empower the meek". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120717034449/http://articles.timesofindia.indiatimes.com/2001-11-14/mumbai/27227025_1_theatre-workshops-street-children-salaam.