உள்ளடக்கத்துக்குச் செல்

மிண்டனாவோ மர மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிண்டனாவோ மர மூஞ்சூறு
Mindanao treeshrew[1]
CITES Appendix II (CITES)[3]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
மர மூஞ்சூறு
குடும்பம்:
துபாலிடே
பேரினம்:
துபையா
இனம்:
து. எவரெட்டி
இருசொற் பெயரீடு
துபையா எவரெட்டி
மிண்டனாவோ மர மூஞ்சூறு பரம்பல்

மிண்டனாவோ மர மூஞ்சூறு (Mindanao treshrew) என்பது பிலிப்பீன்சு மர மூஞ்சூறு என்றும் அழைக்கப்படுகிறது.[2] துபையா எவெரெட்டி எனும் இந்த மர மூஞ்சூறு பிலிப்பீன்சில் உள்ள மிண்டனாவோ பிராந்தியத்தில் மட்டும் காணப்படும் ஓர் அகணிய உயிரி ஆகும். இது முன்பு யூரோகேல் பேரினத்தின் ஒரே ஒரு சிற்றினமாகக் கருதப்பட்டது.[1] ஆனால் இந்தப் பேரினமானது துபையாவுடன் இணைக்கப்பட்டது.[4] இங்கிலாந்து காலனித்துவ நிர்வாகியும் விலங்கியல் சேகரிப்பாளருமான ஆல்பிரட் கார்ட் எவெரெட்டை நினைவுகூரும் வகையில் இந்த அறிவியல் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பரவலும் வாழிடமும்

[தொகு]

மிண்டனாவோ மர மூஞ்சூறுவின் பொதுப்பெயர் குறிப்பிடுவது போல, இது பிலிப்பீன்சில் உள்ள மிண்டனாவோவில் மட்டுமே காணப்படுகிறது. இது மழைக்காடுகள் மற்றும் மலைப்பாங்கான காடுகளில் வாழ்கிறது.

விளக்கம்

[தொகு]

மிண்டனாவோ மர மூஞ்சூறு சுமார் 355 கிராம் எடை வரை வளரக்கூடியது.[5] இதன் உடல் நீளம் 17 முதல் 20 செ. மீட்டரும், வாலின் நீளம் 11 முதல் 17 செ.மீ. வரை இருக்கும்.[6] இது குறிப்பாக நீளமான மூக்குத்தண்டையும், வட்டமான, சமமான உரோமங்களுடன் கூடிய வாலையும் கொண்டுள்ளது. உரோமங்கள் பழுப்பு நிறத்திலிருக்கும். ஆனால் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிற அடிப்பகுதிகளுடன் இருக்கும்.

இது பகல் நேர விலங்காகும். இது நன்றாக மரம் ஏறக்குடியது. தரையில் வேகமாக ஓடும்.

உணவு

[தொகு]

மிண்டனாவோ மர மூஞ்சூறுவின் உணவில் பல்வேறு உணவு வகைகள் உள்ளன. இது பூச்சிகள், பல்லிகள், இளம் பறவைகள், பறவைகளின் முட்டைகள் மற்றும் பழங்களை உணவாக உண்ணும்.

இனப்பெருக்கம்

[தொகு]

காடுகளில், மிண்டனாவோ மர மூஞ்சூறு தரையிலோ அல்லது பாறைகளிலோ வளைகளை அமைக்கின்றது. இவற்றின் இனப்பெருக்கப் பழக்கம் கொல்லைப்படுத்தப்பட்ட விலங்குகளிலிருந்து அறியப்பட்டது. இது 54-56 நாள் கர்ப்ப காலத்திற்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனுகின்றது..

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Helgen, K.M. (2005). "Order Scandentia". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 108–109. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  2. 2.0 2.1 Kennerley, R. (2019). "Tupaia everetti". IUCN Red List of Threatened Species 2019: e.T22784A130877829. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T22784A130877829.en. https://www.iucnredlist.org/species/22784/130877829. பார்த்த நாள்: 20 November 2021. 
  3. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  4. Roberts, T.E.; Lanier, H.C.; Sargis, E.J.; Olson, L.E. (2011). "Molecular phylogeny of treeshrews (Mammalia: Scandentia) and the timescale of diversification in Southeast Asia". Molecular Phylogenetics and Evolution 60 (3): 358–372. doi:10.1016/j.ympev.2011.04.021. பப்மெட்:21565274. Bibcode: 2011MolPE..60..358R. 
  5. Napier JR, Napier PH.
  6. Napier JR, Napier PH. (1968) A handbook of living primates. Morphology, ecology and behaviour of nonhuman primates. Academic, London
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிண்டனாவோ_மர_மூஞ்சூறு&oldid=4052038" இலிருந்து மீள்விக்கப்பட்டது