உள்ளடக்கத்துக்குச் செல்

மிங் அரசமரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும் மிங்
大明
டா மிங்
1368–1644
யொங்ல பேரரசரின் கீழ் சீனா.
நிலைபேரரசு
தலைநகரம்நான்ஜிங்
(1368-1421)
பெய்ஜிங்
(1421-1644)
பேசப்படும் மொழிகள்சீனம்
சமயம்
பௌத்தம், தாவோயிசம், கன்பூசியம், சீன நாட்டார் மதம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• 1368-1398
ஹொங்வூ பேரரசர்
• 1627-1644
சொங்ஜன் பேரரசர்
Chancellor 
• 1368–1398
லியு ஜீ
• –
யான் சொங்
• 
தான் லுன்
• –
ஜாங் ஜூஜங்
• 
ஜூ குவோஜன்
வரலாறு 
• நான்ஜிங்கில் நிறுவப்பட்டது
ஜனவரி 23 1368 1368
• பெய்ஜிங்கின் வீழ்ச்சி
ஜூன் 6 1644 1644
• தெற்கு மிங்கின் முடிவு
ஏப்ரல், 1662
மக்கள் தொகை
• 1393
72,700,000
• 1400
65,000,000¹
• 1600
150,000,000¹
• 1644
100,000,000
நாணயம்சீனப் பணம், சீன நாணயக் குற்றி, நாணயத் தாள் (பின்னர் ஒழிக்கப்பட்டது)
முந்தையது
பின்னையது
[[யுவான் அரசமரபு]]
ஷான் அரசமரபு
[[சிங் அரசமரபு]]

மிங் அரசமரபு (Ming dynasty) என்பது மங்கோலியர்களின் தலைமையிலான யுவான் வம்சத்தின் சரிவைத் தொடர்ந்து 276 ஆண்டுகளாக (1368-1644) சீனாவை ஆட்சிசெய்த ஒர் அரசமரபு ஆகும். பின்னர் இது பெரும் மிங் பேரரசு என அழைக்கப்பட்டது. மனித வரலாற்றில் மிகப்பெரிய ஒழுங்குமுறை அரசாங்கமும், சமூக நிலைத்தன்மையும் கொண்டதாக மிங் அரசமரபு கருதப்படுகிறது [1]. மிங் அரசமரபே சீனாவின் மிகப்பெரிய ஏகாதிபத்திய இனமான ஆன் இனத்தின் கடைசி அரசமரபு ஆகும். இது லீ சிசெங்கின் தலைமையிலான கிளர்ச்சியினால் ஒரு பகுதி வீழ்ச்சியடைந்தது. பின்னர் மாஞ்சுக்களின் தலைமையிலான சிங் அரசமரபு ஆட்சியைக் கைப்பறியது. மிங் தலைநகரான பெய்ஜிங் 1644 ல் வீழ்ச்சியடைந்தபோதும், மிங் அரசமரபினரின் எச்சங்கள் சில பகுதிகளில் 1662 ஆம் ஆண்டு வரை நீடித்தன. இவை அனைத்தும் கூட்டாக தெற்கு மிங் எனப்படுகின்றன.

1368 ,முதல் 1398 வரையிலான காலத்தில் ஆட்சிபுரிந்த ஆங் வு பேரரசர் தனது வம்சத்திற்கென தன்னிறைவு பெற்ற ஒரு நிரந்தரப் படையை உருவாக்க எண்ணினார். தன்னுடைய அரச மரபுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும் கடுமையான அசைக்க முடியாத ஒரு அமைப்பை உருவாக்க அவர் உத்தரவிட்டார்நீ. திமன்ற அலுவலர்கள் மற்றும் தொடர்பற்ற தொழிலதிபர்களின் அதிகாரங்களைக் குறைப்பதில் பெரிதும் கவனம் செலுத்தினார் [2]. சீனா முழுவதும் அவரது பல மகன்களை அர்ப்பணித்து அவர்களுக்கு யுவாங் மிங் சூ சன் என்ற பத்திரிகையின் மூலம் அவர்களுக்கு வழிகாட்ட முனைந்தார், இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த யீன்வென் காலத்தில் ஆச்சரியப்படும்விதமாக இவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. 1402 ஆம் ஆண்டில் யான் இளவரசர் யோங்லீ பேரரசராக பதவியேற்றார். யோங்லீ பேரரசர் யான் நகரை பெய்கிங் என்று மறுபெயரிட்டு இரண்டாம் தலைநகரமாக மாற்றினார். தடை செய்யப்பட்ட இந்நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பினார். சீனப்பெருங் கால்வாயை புணரமைத்தார். இவருக்கு ஆதரவளித்தவர்களுக்கு வெகுமதியளித்து பதவிகள் வழங்கினார்.

மிங் ஆட்சிக்காலத்தில் பாரிய கடற்படையும், ஒரு மில்லியன் வீரர்களைக் கொண்ட காலாட்படையும் கட்டியெழுப்பப் பட்டன. இக் காலத்தில் பாரிய கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றன. நாஞ்சிங்கில் இருந்த கப்பல் படைத்தளம் உலக்த்திலேயே மிகப்பெரிய படைத்தளமாகக் கருதப்படுகிறது. பெரும் கால்வாய், சீனப் பெருஞ் சுவர் ஆகியவற்றுக்கான திருத்த வேலைகள், 15 ஆம் நூற்றாண்டின் முதற் கால் பகுதியில் பெய்கிங்கில் பேரரண் நகரம் அமைக்கப்பட்டமை போன்ற செயல்கள் அடங்கியிருந்தன.

சீனப் பெருஞ்சுவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டாலும் அதை பல்வேறு காலகட்டங்களில் இருந்த சீன அரசுகள் பேணியும் விரிவுப்படுத்தியும் வந்தன. அதில் மிங் வம்சமும் ஒன்று. மிங் வம்சப் பெருஞ்சுவர், கிழக்கு முனையில் ஏபெய் மாகாணத்திலுள்ள கிங்குவாங் டாவோவில் போகாய் குடாவுக்கு அருகில் சங்காய் கடவையில் தொடங்குகிறது. கியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், கியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், கியாயு கடவையையும் தாண்டி பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்க புகைச் சைகைகளைப் பயன்படுத்தின. முக்கிய படை அதிகாரியான வு சங்குயியை, சகாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததன் மூலம், மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர், யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால், பெருஞ்சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது. மிங் அரசர்கள் அதன் பின் சிற்றரசர்கள் ஆனாலும் தென் மிங் அரசு என்னும் சிற்றரசை ஏற்படுத்தி 7 அரசர்கள் கி. பி. 1644 முதல் கி. பி. 1662 வரை அரசாண்டனர்.

யுவான் அரசின் அழிவும் மிங் அரசின் தோற்றமும்

[தொகு]

மங்கோலியர்களின் கீழ் அமைந்த யுவான் அரசமரபு (1271-1368) மிங் அரசமரபுக்கு முன்னராக சீனாவை ஆண்டு வந்தது. யுவான் மரபு ஆட்சியாளர்கள் ஹான் சீனர்களுக்கு இழைத்த கொடுமைகள், இன பாகுபாடுகள், அதிக வரி வதிப்பு, நீர்ப்பாசனத் திட்டங்களை கவனிக்காமல் விட்டது, அதனால் மஞ்சள் ஆற்றில் வந்த வெள்ளம் போன்றவை மக்கள் மத்தியில் யுவான் அரசு தொடர்பாக அதிருப்தியை ஏற்படுத்தின. இதனால் வேளாண்மை சார் மக்கள் அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினர். அதில் ஹான் சீனர்களும், சிவப்பு தலைப்பாகை குழுவினரும் அதிகம் இணைந்தனர்.

சிவப்பு தலைப்பாகை குழுவினர் வெள்ளைத்தாமரை என்ற பௌத்த இரகசிய அமைப்பின் துணையோடு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சிவப்பு தலைப்பாகை குழுவின் குழுவில் இணைந்த சூ யுவான்சாங்க் புரட்சிக்குழுவின் தலைவனின் மகளை மணந்தார். சூவின் கீழ் புரட்சிக்குழு நாஞ்சிங் என்னும் நகரை ஆக்கிரமித்தது. பிற்பாடு இதுவே மிங் பேரரசின் தலைநகராக அமைந்தது குறிப்பிடத்தக்கது. யுவான் மரபில் நடக்கும் குழப்பங்களை பயன்படுத்தி தங்களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என ஹான் அரசர்களை வற்புறுத்தினர். கி.பி. 1363 ல் போயாங் ஏரியில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க போரில் 6,50,000 கடற்படை வீரர்களைக் கொண்ட சூ புரட்சிக்குழு ஆன் கடற்படைத் தளபதியின் கீழ் அமைந்த 20 லட்சம் கடற்படை வீரர்களைக் கொண்ட ஹான் அரசிடம் தோற்றது. அதனால் சூ போயாங் ஏரியின் வடக்குப் பகுதிகளை விட்டுவிட்டு தெற்குப் பகுதிகளை மட்டும் பிடித்துக் கொண்டார். கி.பி. 1367ல் சிவப்பு தலைப்பாகை குழுவினரின் தலைவன் ஐயமான முறையில் இறந்து போக ஆன் அரசின் தலைநகரான தாடுவை (தற்போதைய பெய்ஜிங்) நோக்கி சூ தன் படையை அனுப்பினார். ஹான் அரசின் கடைசி அரசனான சாங்டு வட சீனப்பகுதிக்கு தப்பிச் சென்றார். பிற்பாடு சூ மிங் அரசராக பதவியேற்றதும் அல்லாமல் தாடுவை பெய்பிங் எனப் பெயர் மாற்றி மிங் அரச மரபை தோற்றுவித்தார்.

மிங் அரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்

[தொகு]

மிங் அரசமரபில் மூன்றாவது அரசராக பதவியேற்ற சூ டி என்பவர் யாங்குல் பேரரசை தோற்றுவித்தார். இவர் தன் முந்தைய இரண்டு தலைமுறைகளிலும் மிங் அரசின் தலைநகராக இருந்த நாஞ்ஞிங்கு நகரத்தை துணைத் தலைநகரமாக்கினார். இவரது ஆட்சியில் தற்போதைய பெய்கிங் தலைநகரானது. இவர் தன் முந்தைய தலைமுறையினர் ஏற்படுத்திய கொள்கைகளில் பல்வேறு கொள்கைகளை திருத்தி அமைத்தார். மிங் அரச மரபில் 17 அரசர்கள் கி. பி. 1367 முதல் கி. பி. 1644 வரை அரசாண்டனர். கி. பி. 1630களில் மிங் அரசமரபு மேற்கு சாங்சி பகுதியுடனான கடல் வணிகத்தை மிங் அரசு நிறுத்தியது. இதனால் அப்பகுதியில் இருந்த புரட்சிக்குழுக்கள் லீ சீசெங்கின் கீழ் சீனப் பெருஞ்சுவரை கடந்ததிலிருந்து மிங் அரசு அழிவை நோக்கிச் செல்லத் துவங்கியது.

அரசாட்சி

[தொகு]

சீனாவில் அரசு நிறுவனங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே மாதிரியான அமைப்பில் இயங்கி வந்துள்ளன. ஆனால் ஆட்சிபுரிந்த ஒவ்வொரு வம்சமும் அதன் சொந்த குறிப்பிட்ட நலன்களைப் பிரதிபலிக்கும் சிறப்பு அலுவலகங்களையும், அலுவலர்களையும் நிறுவின. மிங் நிர்வாகம் பேரரசருக்கு உதவுவதற்காக, பிரதான செயலாளர்களைப் பயன்படுத்தியது, இவர்கள் யோங்லீ பேரரசரின் ஆட்சிக்குட்பட்ட கடிதங்களை கையாண்டனர். பின்னர் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த நிறுவனமாக செயல்பட்ட செயலகத்தில் ஆறு அமைச்சுக்கள்-பணியாளர்கள், வருவாய், சடங்குகள், போர், நீதி மற்றும் பொது வேலைகள் ஆகியவை மாநிலத்தின் நேரடி நிர்வாக பிரிவுகளாக விளங்கின [3].

மக்கள் தொகை

[தொகு]

சீனாவைப் பற்றியும் சீனாவுடன் தொடர்புடைய அம்சங்களையும் ஆயும் இயல் சீனவியல் ஆகும். சீனவியல் அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் மிங் வம்சத்தின் ஒவ்வொரு சகாப்தத்திற்குமான மக்கள் எண்ணிக்கையைக் குறித்து விவாதிக்கின்றனர். மிங் அரசின் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் சந்தேகத்திற்குரியவை என்று வரலாற்றாசிரியர் தீமோத்தி பரூக் குறிப்பிடுகிறார். நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்திலுள்ள மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறினர். வரலாற்றாசிரியர் தீமோத்தி ப்ரூக் குறிப்பிடுகிறார். பல மாவட்ட அதிகாரிகளும் தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையையும் குறைத்தனர்.[4].குழந்தைகள் பெரும்பாலும் கணக்கில் காட்டப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் மட்டுமின்றி வயதான பெண்களின் எண்ணிக்கையும் கணக்கில் எடுக்கப்படாததால், மிங் அரச மரபு முழுவதும் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஐயத்திற்கு இடமளிக்கின்றன [4].மிங் ஆட்சிக் காலப்பகுதியில் நாட்டின் மக்கள்தொகை 160 தொடக்கம் 200 மில்லியன்கள் வரை இருந்திருக்கலாம் என மதிப்பிட்டு உள்ளனர்[5]. கல்காரிப் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, உலக வரலாற்றில் ஒழுங்கான அரசு, சமூக உறுதிப்பாடு என்பவற்றைக் கொண்ட சிறப்பான காலப் பகுதியொன்றை மிங் அரசு உருவாக்கியிருந்தது.

கலை இலக்கியம்

[தொகு]

இலக்கியம், ஓவியம், கவிதை, இசை, மற்றும் பல்வேறு வகையான சீன இசை நாடகங்கள் மிங் வம்ச காலத்தின் போது வளர்ந்துள்ளன. குறிப்பாக பொருளாதார வளம் குறைந்த யாங்க்சி பள்ளத்தாக்கில் இத்தகைய கலை இலக்கிய வளர்ச்சி நிகழ்ந்துள்ளது.டங் வம்சக் காலத்திலிருந்தே குறுகிய அரிவியல் கதைகள் பிரபலமாக இருந்தன[6] சூ குவாங்கி, சூ சியாக், சாங் இங்சிங் போன்ற சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் பெரும்பாலும் தொழில்நுட்பப் படைப்பாகவும் கலைக் களஞ்சியங்களாகவும் இருந்தன. மிகவும் வியக்கத்தக்க இலக்கிய வளர்ச்சி நாட்டுப்புற மொழி நாவல்களில் இருந்தது.

அறிவியல் வளர்ச்சி

[தொகு]

சாங் வம்சத்தின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், மிங் வம்சத்தில் குறைவான முன்னேற்றமே நிகழ்ந்தது. மேற்கத்திய நாடுகளிம் கண்டுபிடிப்பு வேகத்துடன் மிங் வம்சத்தவர்களால் போட்டியிட முடியவில்லை. உண்மையில், மிங் வம்ச சீன அறிவியலில் முக்கிய முன்னேற்றங்கள் ஐரோப்பாவுடன் ஏற்பட்ட தொடர்புகளுக்குப் பின்னரே தொடங்கியது. 1626 ஆம் ஆண்டில் தொலைநோக்கி தொடர்பான சீன ஆய்வு நூல் எழுதப்பட்டது. 1634 இல் தொலைநோக்கி வாங்கப்பட்டது. முக்கோணவியல் அடிப்படைகள் உருவாக்கப்பட்டன. *

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Edwin Oldfather Reischauer, John King Fairbank, Albert M. Craig (1960) A history of East Asian civilization, Volume 1. East Asia: The Great Tradition, George Allen & Unwin Ltd.
  2. Crawford, Robert. "Eunuch Power in the Ming dynasty". T'oung Pao, Second Series, Vol. 49, Livr. 3 (1961), pp. 115–148. Accessed 14 October 2012.
  3. Hucker, Charles O. (1958), "Governmental Organization of The Ming Dynasty", Harvard Journal of Asiatic Studies, 21: 1–66, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2718619.
  4. 4.0 4.1 * Brook, Timothy (1998), The Confusions of Pleasure: Commerce and Culture in Ming China, Berkeley: University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-22154-0.
  5. Zhang Wenxian. "The Yellow Register Archives of Imperial Ming China". Libraries & the Cultural Record, Vol. 43, No. 2 (2008), pp. 148–175. Univ. of Texas Press. Accessed 9 October 2012.
  6. * Ebrey, Patricia Buckley; Walthall, Anne; Palais, James B. (2006), East Asia: A Cultural, Social, and Political History, Boston: Houghton Mifflin Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-13384-4.

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ming Dynasty
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிங்_அரசமரபு&oldid=3704101" இலிருந்து மீள்விக்கப்பட்டது