உள்ளடக்கத்துக்குச் செல்

மிகைல் மிசூசுத்தின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகைல் மிசூசுத்தின்
Mikhail Mishustin
உருசியாவின் தலைமை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 சனவரி 2020
குடியரசுத் தலைவர்விளாதிமிர் பூட்டின்
முன்னையவர்திமித்ரி மெட்வெடெவ்
நடுவண் வரிகள் சேர்வைப் பணிப்பாளர்
பதவியில்
6 ஏப்ரல் 2010 – 16 சனவரி 2020
குடியரசுத் தலைவர்திமித்ரி மெட்வெடெவ்
விளாதிமிர் பூட்டின்
முன்னையவர்மிகைல் மொக்ரெத்சொவ்
பின்னவர்தனீல் இயெகோரொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மிகைல் விளாதிமீரொவிச் மிசூசுத்தின்

3 மார்ச்சு 1966 (1966-03-03) (அகவை 58)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர்
அரசியல் கட்சிசுயேச்சை
முன்னாள் கல்லூரிஇசுத்தான்கின்

மிகைல் விளாதிமீரொவிச் மிசூசுத்தின் (Mikhail Vladimirovich Mishustin, உருசியம்: Михаил Владимирович Мишустин, பிறப்பு: 3 மார்ச் 1966) உருசியப் பொருளாதார அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2020 சனவரி 16 இல் உருசியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இவர் 2020 சனவரி 15 இல் உருசியப் பிரதமராக அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டினால் பரிந்துரைக்கப்பட்டார்.[1] சனவரி 16 இல் இவரது நியமனம் அரச தூமா என அழைக்கப்படும் உருசிய நாடாளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[2]

தலைமை அமைச்சர்

[தொகு]

அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் 2020 சனவரி 15 இல் நிகழ்த்திய நாடாளுமன்ற உரையில் உருசிய அரசியலமைப்பில் பல திருத்தங்களைப் பிரேரித்தார். இதனை அடுத்து பிரதமர் திமித்ரி மெட்வெடெவ் தமது அமைச்சரவையைக் கலைப்பதாகவும், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அரசுத்தலைவரின் அதிகாரங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பகிர்ந்தளிக்கும் பூட்டினின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொருட்டு, தாம் பதவி விலகுவதாக மெட்வெடெவ் அறிவித்தார்.[3] இவரது பதவி விலகலை பூட்டின் ஏற்றுக் கொண்டார்.[4] அன்றே பூட்டின் புதிய தலைமை அமைச்சர் பதவிக்கு மிகைல் மிசூசுத்தினப் பரிந்துரைத்தார்.[1] சனவரி 16-இல், நாடாளுமன்றம் மிசூசித்தினைப் பிரதமராக ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இவருக்கு எதிராக வாக்களிக்கவில்லை.[5][6] அதே நாளில் பூட்டின் அவரை தலைமை அமைச்சராக அதிகாரபூர்வமாக நியமித்தார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

திருமணமான மிசூசுத்தினுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[8] இவர் பனி வளைதடியாட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Путин предложил главе ФНС Михаилу Мишустину пост премьера". Archived from the original on 15 January 2020. பார்க்கப்பட்ட நாள் 15 January 2020.
  2. Litvinova, Daria (16 January 2020). "Russia's new PM a career bureaucrat with no political aims". Associated Press இம் மூலத்தில் இருந்து 16 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200116144452/https://apnews.com/dac9ce99b613d792bc2556b8c69f23c2. 
  3. "Russian prime minister and government resign after Putin speech" (in en). Reuters. 15 January 2020. https://www.reuters.com/article/us-russia-politics-government/russian-prime-minister-and-government-resign-after-putin-speech-idUSKBN1ZE1RB. பார்த்த நாள்: 18 January 2020. 
  4. "Правительство России уходит в отставку". РИА Новости (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 15 January 2020.
  5. Soldatkin, Vladimir; Marrow, Alexander (January 16, 2020). "Russian lawmakers approve Mishustin as PM". ராய்ட்டர்ஸ். https://www.reuters.com/article/us-russia-politics-mishustin-vote/russian-lawmakers-approve-mishustin-as-pm-idUSKBN1ZF1J2. "Mishustin received 383 votes of 424 cast, with no votes against and 41 abstentions in a victory that had been all but assured when he won the unanimous backing of his party, United Russia, which has a strong majority in the chamber." 
  6. Госдума одобрила Мишустина на пост премьера
  7. "Михаил Мишустин назначен Председателем Правительства Российской Федерации". Archived from the original on 16 January 2020. பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.
  8. 8.0 8.1 Ilyushina, Mary; Guy, Jack (16 January 2020). "Mikhail Mishustin didn't have an English Wikipedia page on Wednesday morning. A day later, he's Russia's prime minister". CNN. Archived from the original on 16 January 2020. பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகைல்_மிசூசுத்தின்&oldid=2900828" இலிருந்து மீள்விக்கப்பட்டது