மாவட்ட விவரச்சுவடி
மாவட்ட விவரச்சுவடி (District Gazetteer) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் புவியியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு போன்றவற்றை விரிவாக மாவட்ட அளவில் குறிக்கப்பட்டுள்ள விவர நூலாகும். ஒரு மாவட்டம் குறித்து என்னென்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அவை அனைத்தும் இந்த விவரச்சுவடிகளில் தொகுக்கப்பட்டிருக்கும். இவை இந்தியாவைக் கைப்பற்றியபோது பிரித்தானிய தலைமை ஆளுநரின் (வைஸ்ராய்) உத்தரவில் பேரில் உருவாக்கபட்டன. பெரும்பாலான விவரச்சுவடிகள் முதலில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப்பட்டன. இருப்பினும் இதில் பல அண்மைய காலங்களில் மீண்டும் வெளியிடப்பட்டன அல்லது இற்றைப்படுத்தி திருத்தப்பட்டன. [1]
விவரச்சுவடிகளை வெளியிடப்படும் வரை, இந்திய புவியியல், பண்பாடு போன்றவற்றை முறையாக தொகுத்த நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. பேரரசர் அக்பர் ஆட்சியின் போது தொகுக்கப்பட்ட அபுல் பாசலின் அயினி அக்பரி இதோடு தோராயமாக நெருக்கமானதாக இருந்தது. [2] பொதுமக்களுக்கு பல விவரச்சுவடிகள் கிடைத்தாலும், [3] அவற்றின் துல்லியமானது கல்வியாளர்கள், அறிஞர்கள் போன்றவர்களிடையே பெரும் சர்ச்சைக்குரிய விசயமாக உள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் பண்பாட்டு வரலாற்றைத் தொகுத்த ஒரு மூன்றாம் தரப்பு மூலத்தின் விரிவான பணிகளில் ஒன்று என அவை புறக்கணிக்கப்பட முடியாதவையாக அவை உள்ளன. [2]
1868 ஆம் ஆண்டு ஜே. எச். நெல்சன் எழுதிய மதுரா மேனுவல் மதமராசு மாகாணத்தில் வெளியான முதல் விவசர் சுவடி ஆகும். இவ்வாறு பிரித்தானியர் ஆட்சி்க் காலத்தில் தஞ்சாவூர், மதுரை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், திருநெல்வேலி விவரச்சுவடிகள் வெளியாயின. இந்திய விடுதலைக்குப் பிறகும் பல விவரசுசுவடிகள் வெளியாகியுள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. நீலகிரி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி போன்ற மாவட்ட விவரசு சுவடிகள் தமிழில் மொழிபெயர்த்து நூலாக வெளியிடபட்டுள்ளன. தமிழ்நாட்டு மாவட்ட விவரச்சுவடிகள் சென்னை ஆவணக் காப்பகத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Firozpur, Punjab District Gazetteer, 1983 edition" இம் மூலத்தில் இருந்து 2012-01-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120109210725/http://punjabrevenue.nic.in/gazfzpr1.htm.
- ↑ 2.0 2.1 Biswas, Kumud (July 6, 2003). "What A Gazetteer Is Not". Boloji.com இம் மூலத்தில் இருந்து ஜனவரி 14, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100114110110/http://boloji.com/environment/21.htm.
- ↑ "Aurangabad, Maharashtra, District Gazetteer". http://www.maharashtra.gov.in/english/gazetteer/gazetteer.php?level=2&showFile=1&gazetteerSqlId=20020422124737&gazetteerMainId=&gazetteerFile2Id=&distId=19&gazId=20020422121541&pubYear=&fileExists=&headingSqlName=Preface&chapter=.
- ↑ விவரச்சுவடிகள், அ. வெண்ணிலா இந்து தமிழ் திசை, 25, பெப்ரவரி, 2024