மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், திருமூர்த்தி நகர்
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், திருமூர்த்தி நகர் (District Institute of Education & Training, Thirumoorthy Nagar) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் திருமூர்த்திமலை அடிவாரத்தில் திருமூர்த்தி நகர் அமைந்துள்ளது.[1] இங்கு அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மிகவும் பழமையானது. இந்நிறுவனம் முதலில் ஆதாரக் கல்வி ஆசிரியர் பயிற்சி நிலையமாகச் செயல்பட்டு வந்தது. பத்து ஏக்கர் பரப்பளவில் அரசு நிலத்தில் நிறுவனம் அமைந்துள்ளது.
ஆரம்ப/தொடக்கக் கல்வியின் உலகளாவிய மயமாக்கலுக்கான சிறப்புக் குறிப்புடன் பல்வேறு உத்திகள் மற்றும் திட்டங்களின் வெற்றிக்காக அடிமட்ட அளவில் கல்வி மற்றும் ஆதார ஆதரவை வழங்குதல். சேவையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் வருங்கால ஆசிரியர்களுக்கு சிறந்த கல்வி உள்ளீட்டை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.[2][3] அனைவருக்கும் கல்வி, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு 1986 ஆம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கை அடிப்படையில் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. தொடக்கக் கல்வியின் தரத்தினை மேம்படுத்திடவும், பணியாற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் புதுப்பிக்கவும் தேசிய கல்விக் கொள்கை முனைப்பினைக் காட்டியது. இந்நிறுவனம் முதல் கட்ட நிலையில் தமிழக அரசு ஆணை எண் 1799 (கல்வி) நாள் 7.12.1988-ன் உத்தரவிற்கிணங்க நிலை உயர்த்தப்பட்டு 23.12.1988 முதல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாகச் செயலாற்றி வருகின்றது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திருப்பூரில் தமிழ்ப் பாடத்துக்கான கற்றல் விளைவுகள் செயலி அறிமுகம்", Hindu Tamil Thisai, 2023-04-17, retrieved 2024-01-20
- ↑ "ஆசிரியர்களுக்கு செயல் ஆராய்ச்சி பயிற்சி :", Hindu Tamil Thisai, 2021-03-10, retrieved 2024-01-20
- ↑ தினத்தந்தி (2021-04-17), "ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி", www.dailythanthi.com, retrieved 2024-01-20
- ↑ "::Welcome to State Council Of Educational Research And Training, Chennai.::", web.archive.org, 2017-05-07, retrieved 2024-01-20