உள்ளடக்கத்துக்குச் செல்

மாலதி வீரராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாலதி வீரராகவன் (சூலை 11, 1962 - மே 11, 2020) அகலப்பட்டை வலையமைப்பு, சேணொலி தற்காலிக பிணையம், வாகன தற்காலிக வலையமைப்பு மற்றும் ஆப்டிகல் வலையமைப்பு உள்ளிட்ட தகவல் தொடர்புவலையமைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்திய மற்றும் அமெரிக்க மின் பொறியாளர் ஆவார். இவர் ஏடி & டி பெல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளராகவும், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 

வாழ்க்கை மற்றும் வேலை

[தொகு]

வீரராகவன் சூலை 11, 1962-இல் பிறந்தார்.[1] 1984-இல் சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். மின் பொறியியல் மேற்படிப்பிற்காக டியூக் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். 1985-இல் முதுநிலைப் பட்டம் பெற்று 1988-இல் முனைவர் பட்டம் பெற்றார்.[2] இவரது முனைவர் பட்ட ஆய்வு மாதிரியமைத்தல் மற்றும் பழுது-பொருத்து செயல்படும் பலநிலை செயலி அமைப்புகளின் மதிப்பீடு, கிஷோர் எசு. திரிவேதியால் மேற்பார்வையிடப்பட்டது.[3]

1988ஆம் ஆண்டு கொலம்பஸ், ஓகையோவில் தொடங்கி 1992ஆம் ஆண்டு நியூ ஜெர்சியின் ஹோல்ம்டெல் நகருக்கு பெல் ஆய்வுக்கூடங்கள்தொழில்நுட்ப ஊழியர்களின் ஆராய்ச்சியாளராகவும் உறுப்பினராகவும் ஆனார். இங்கு இவரது பணியானது இணையவழி ஒலி பரிமாற்ற சேவைகளுக்கான விநியோகிக்கப்பட்ட அழைப்பு செயலாக்கத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. இவர் 1994-இல் தொழில்நுட்ப ஊழியர்களின் புகழ்பெற்ற உறுப்பினராகப் பெயரிடப்பட்டார்.

1999-இல் இவர் புரூக்ளின் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் (இப்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி) இணைப் பேராசிரியராக கல்விப் பணியினைத் தொடர்ந்தார். இவர் 2003-இல் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் மின் மற்றும் கணினி பொறியியல் துறைகளால் கூட்டாக வழங்கப்படும் கணினி பொறியியல் நிறுவன இயக்குநராகச் சேர்ந்தார். பின்னர் 2007-இல் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

இறப்பு

[தொகு]

இவர் மே 11, 2020 அன்று இறந்தார்.[4]

அங்கீகாரம்

[தொகு]

வீரராகவன், 2020ஆம் ஆண்டின் இந்திய மின்னணுவியலில் "கட்டுப்பாடு-கட்டமைப்புகள், சமிக்கை நெறிமுறைகள் மற்றும் கலப்பின வலையமைப்பு துறையில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக" மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழக சகாவாக அங்கிகாரம் பெற்றார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Obituary: Malathi Veeraraghavan, Dignity Memorial, பார்க்கப்பட்ட நாள் 2023-05-23
  2. Curriculum vitae (PDF), February 15, 2019, பார்க்கப்பட்ட நாள் 2023-05-23
  3. கணித மரபியல் திட்டத்தில் மாலதி வீரராகவன்
  4. Walker, Karen (May 26, 2020), "In Memoriam: Malathi Veeraraghavan, Champion of Ideas and Experiences", UVAToday, University of Virginia
  5. 2020 Newly Elevated Fellows (PDF), IEEE, பார்க்கப்பட்ட நாள் 2023-05-23

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_வீரராகவன்&oldid=3881830" இலிருந்து மீள்விக்கப்பட்டது