உள்ளடக்கத்துக்குச் செல்

மார்வின் கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்வின் கே
1973ல் மார்வின்
பிறப்பு(1939-04-02)ஏப்ரல் 2, 1939
இறப்புஏப்ரல் 1, 1984(1984-04-01) (அகவை 44)
பணி
  • பாடகர்
  • பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1957–1984

மார்வின் கே (Marvin Gaye, ஏப்ரல் 2, 1939 – ஏப்ரல் 1, 1984) ஒரு அமெரிக்கப் பாடகரும் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். மற்றவர்கள் மீது தன்னலமற்ற அன்பை அளிப்பதன் மூலம் இனப் பிளவுகளைக் குறைக்க இயலும் என்ற கருத்தின் அடிப்படையில் அவரது பல பாடல்கள் அமைந்திருந்தன[1]. யூனிவர்சல் மியூசிக் குரூப் என்ற குழுமத்தின் ஓர் அங்கமான மோடவுன் ரெக்கார்ட்சு என்ற பதிவு நிறுவனத்தில் 1961ல் தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய மார்வின், விரைவில் அந்நிறுவனத்தின் முக்கிய ஆண் பாடகர் என்ற சிறப்பினைப் பெற்றார். ஆனால், 1971ல் அவர் வெளியிட்ட "வாட்சு கோயிங் ஆன்" என்ற இசைத் தொகுப்பிற்குப் பிறகு மோடவுனில் இருந்து விலகி, தன் இசைத் தொகுப்புகளைத் தனித்து வெளியிட்டார்[1].

உள்ளுணர்வு இசை எனப்படும் ஒரு இசை வகையிலும் ஆர்என்பி எனப்படும் ஒரு இசை வகையிலும் மார்வின் தன் பெரும்பாலான பாடல்களை அமைத்துள்ளார்[2].

விருதுகள்

[தொகு]

மார்வின் 1982ல் வெளியிட்ட "செக்சுவல் ஹீலிங்" என்ற இசைத் தொகுப்பிற்காக 1983ல் இரு கிராமி விருதுகளும் அவர் இறந்த பிறகு 1996ல் வாழ்நாள் சாதனைக்கான கிராமி விருதும் அவருக்கு வழங்கப்பட்டன[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "நியூ வேல்டு என்சைக்ளோபீடியாவிலிருந்து: Marvin Gaye". new world encyclopedia. Retrieved 14 மே 2022.
  2. "ALLMUSIC: Marvin Gaye - Overview". allmusic.com. Retrieved 15 May 2022.
  3. "imdb: Marvin Gaye Awards". imdb.com. Retrieved 14 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்வின்_கே&oldid=3431176" இலிருந்து மீள்விக்கப்பட்டது