மார்கியைட்டு
Markeyite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ca9(UO2)4CO3)13 • 28H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மேற்கோள்கள் | [1] |
மார்கியைட்டு (Markeyite) என்பது Ca9(UO2)4CO3)13 • 28H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் யுரேனைல் கார்பனேட்டு கனிமம் என்று வகைப்படுத்தப்படும் இது அமெரிக்காவின் யூட்டா மாநிலத்திலுள்ள மார்கி சுரங்கத்தில் கண்டறியப்பட்டது. கனிமவியலாளர் அந்தோனி ஆர்.காம்ஃப் அமெரிக்காவின் லாசு ஏஞ்சல்சு மாகாணத்திலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இக்கனிமத்தின் கட்டமைப்பைக் கண்டறிந்தார். [2]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் மார்கியைட்டு கனிமத்தை Mk[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
இந்த கனிமத்திற்கான இணையான ஒரு வகை பொருள் அமெரிக்காவின் லாசு ஏஞ்சல்சு மாகாணத்திலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் உருசியாவின்[4] அறிவியல் கல்விக்கழகத்திலுள்ள பெர்சுமேன் கனிமவியல் அருங்காட்சியகம் ஆகியவற்றின் தொகுப்புகளில் உள்ளது.
இருப்பிடம்
[தொகு]அமெரிக்காவின் மார்கி சுரங்கம், சிவப்பு பள்ளத்தாக்கு, வெண் பள்ளத்தாக்கு மாவட்டம், சான் யுவான் கோ, யூட்டா போன்றவை இக்கனிமத்தின் இருப்பிடங்களாக கருதப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Markeyite".
- ↑ "Markeyite: Markeyite mineral information and data". www.mindat.org. Retrieved 2017-09-04.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "Markeyite | Carbon Mineral Challenge". mineralchallenge.net (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2017-09-04.