மார்கரெட் தர்ன்புல்
மார்கரெட் தர்ன்புல் Margaret Turnbull | |
---|---|
உலக அறிவியல் விழாவில் தர்ன்புல், ஜூன் 2008 | |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | அரிசோனா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | புறக்கோள் வாழ்தகவு |
மார்கரெட் கரோல் தர்ன்புல் (Margaret Carol Turnbull) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 2004 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் வாழத்தகும் கோள்கள் அமைந்த விண்மீன் அமைப்புகளிலும் இரட்டைச் சூரிய அமைப்புகளிலும் வல்லுனர் ஆவார்,[1] இவர் கோள் வாழ்தகவு காண்பதிலும் வல்லுனர் ஆவார்.
இவர் 2002 இல் ஜில் டார்ட்டருடன் இணைந்து வாழ்தகவு கோள்கள் அட்டவணையை உருவாக்கினார்.[2] இது மாந்த வாழ்தகவு வாய்ப்புள்ள விண்மீன் அமைப்புகளின் அட்டவணை ஆகும்.[3] அடுத்த ஆண்டு 100 ஒளியாண்டுகளுக்குள் அமைந்த வாழ்தகவு விண்மீன் அட்டவணைப் பட்டியலில் இருந்த 5000 விண்மீன்களில் மிகவும் தகுதி வாய்ந்த 30 விண்மீன்களைத் தேர்வு செய்தார்.[3]
இவர் 2006 இல் ஒவ்வொன்றிலும் ஐந்து விண்மீன்கல் அமைந்த இரு வாழ்தகவு வாய்ப்புள்ள விண்மீன்களை குறும்பட்டியல்களை வெளியிட்டார்.[4] முதல் பட்டியலில் ஆலன் தொலைநோக்கி அணி உதவியால் சேதி கதிர்த்தேட்டங்களில் கண்டறிந்த விண்வமீன்கள் ஆகிய ([[பீட்டா கானும் வெனட்டிகோரம், எச். டி. 10307,எச். டி. 211415, 18 சுகார்ப்பி, 51 பெகாசி ஆகியன அடங்கும். இரண்டாம் பட்டியலில் தரை கோள்காணி கண்டறிந்த சிறந்த ஐந்து விண்மீன்கள் ஆகிய எப்சிலான் இண்டி, எப்சிலான் எரிதானி, [[40 எரிதானி, ஆல்பா சென்டாரி B, டௌ சேதி என்பன அடங்கும்.
தர்ன்புல்லை 2007 இல் CNN தொலைக்காட்சி "மதிநுட்பர்" என இவரது மிகவும் உயிர்தோன்றி அறிதிறன் நாகரிகம் நிலவ மிகவும் வாய்ப்புள்ள கோள்கள் உருவாக வல்ல விண்மீன்களின் அட்டவணையை உருவாக்கிய பணிக்காக பாராட்டியது.[5]
சிறுகோள் 7863 தர்ன்புல் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ staffwriter (1 January 2004). "Gem Sorting for the Next Earth". Astrobiology Magazine. Archived from the original on 28 June 2011. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- ↑ "HabStars: Speeding Up In the Zone". Astrobiology Magazine. 2003. Archived from the original on 4 October 2003. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- ↑ 3.0 3.1 "Stars and Habitable Planets". Archived from the original on 28 June 2011. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- ↑ Lane, Earl (18 February 2006). "Astronomer Margaret Turnbull: A Short-List of Possible Life-Supporting Stars". American Association for the Advancement of Science. Archived from the original on 22 July 2011. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- ↑ Furman, Eric (13 July 2007). "Geniuses who will change your life". CNN. Archived from the original on 17 July 2010. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Margaret Turbull personal page at University of Arizona". Archived from the original on 2 March 2007. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- Turnbull, Margaret. "TARGET SELECTION FOR SETI. I. A CATALOG OF NEARBY HABITABLE STELLAR SYSTEMS" (PDF). The Astrophysical Journal Supplement Series. pp. 181–198. Archived from the original (PDF) on 9 November 2006. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- Turnbull, Margaret (2004). "THE SEARCH FOR HABITABLE WORLDS: FROM THE TERRESTRIAL PLANET FINDER TO SETI" (PDF). PhD Thesis. University of Arizona, Department of Astronomy. Archived from the original (PDF) on 22 October 2007. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.