மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் | |
---|---|
![]() | |
பிறப்பு | 7 மார்ச்சு 1984[1] புளியங்குளம், திருநெல்வேலி, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–முதல் |
மாரி செல்வராஜ் (Mari Selvaraj) என்பவர் தமிழ் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநரும் ஆவார். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார். பத்து வருடங்களுக்கும் மேலாக இயக்குநர் ராமிடன் உதவி இயக்குநராக பணி புரிந்தவர். பத்திரிக்கையாளராக சில வருடங்கள் பணியில் இருந்த இவர், ஆனந்த விகடனில் "மறக்க நினைக்கிறேன்" என்ற தொடரை எழுதியுள்ளார்.[2][3]
இளமை
[தொகு]மாரி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் ஆவார். வறட்சிகாலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு ஆடியிருக்கிறார்.
திரைப்பட வாழ்க்கை
[தொகு]சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்த இவர் ராமிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பின்னர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார்.[4]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | குறிப்பு |
---|---|---|
2018 | பரியேறும் பெருமாள் | நான் யார், கருப்பி பாடல்கள் |
2021 | கர்ணன் | கண்டா வர மற்றும் உட்ராதிரங்க எப்போ பாடல்கள் |
2023 | மாமன்னன் | |
2024 | வாழை | ஒரு ஊர்ல ராஜா, பாடாவதி பாடல்கள்[5] அறிமுகத் தயாரிப்பாளர்[6] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mari Selvaraj". IMDb (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-06-30.
- ↑ முதல் படம் அல்ல, முதல் கோபம் - சிஷ்யனை வாழ்த்திய இயக்குநர் ராம்
- ↑ "மறக்க நினைக்கிறேன்", ஆனந்த விகடன், மே 1, 2013
- ↑ பிருந்தா சீனிவாசன் (11 சனவரி 2019). "புதிய தலைமுறை இயக்குநர்கள்: நம்மைச் சுற்றி நடக்கும் கதைகள்". செவ்வி. இந்து தமிழ். Retrieved 12 சனவரி 2019.
- ↑ "Mari Selvaraj's Vaazhai first single Thenkizhakku out - Film to release on this date" (in ஆங்கிலம்). OTTPlay. 18 July 2024. Archived from the original on 18 July 2024. Retrieved 18 July 2024.
- ↑ Features, C. E. (2022-11-21). "Mari Selvaraj's next titled Vaazhai". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-08-25.