உள்ளடக்கத்துக்குச் செல்

மாயா (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயா
பிறப்புமகாதேவன்
வைக்கம், கேரளம்
இறப்பு(2025-01-22)சனவரி 22, 2025 (அகவை 98)
சென்னை, தமிழ்நாடு
அறியப்படுவதுஓவியர்

மகாதேவன் என்ற இயற்பெயர் கொண்ட மாயா (இறப்பு: 22 சனவரி 2025) தமிழக ஓவியர்களுள் ஒருவர்.[1]

இவரது முதல் ஓவியம் ஆனந்த விகடனில் 1955 ஆம் ஆண்டு ஜனவரி இதழில் "சாமிக்கண்ணு" என்ற சிறுகதைக்காக வெளியானது. [1] இவர் 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் "அவனும் அவளும்" என்ற சிறுகதைக்காக வரைந்த ஓவியத்தில் மாயா என கையெழுத்திட்டார். அதுவரை விகடனில் வேறு மகாதேவன் இருந்தமையால் கையெழுத்து இடாமல் ஓவியங்களை வரைந்து தந்துள்ளார்.[1] தமிழ் பத்திரிகை உலகின் முதல் படக்கதையான "ஜமீன்தார் மகன்" என்பதற்கு இவர் ஓவியம் வரைந்து தந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட ஓவியர் மாயா என்ற மகாதேவன் கேரளம், வைக்கம் என்ற ஊரில் ராமசுப்பிரமணியம்-பாகீரதி ஆகியோருக்குப் பிறந்தார்.[2] தாத்தா கிருஷ்ண ஐயர் நில உரிமையாளராக இருந்தவர், தந்தை நகரத் திட்டமிடல் நில அளவையாளராகப் பணியாற்றியவர்.[2]

இறப்பு

[தொகு]

ஓவியர் மாயா 2025 சனவரி 22 அன்று தனது 98 ஆவது அகவையில் காலமானார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ஆனந்த விகடன் பொக்கிசம் 1959 - 17.02.2010 பக்கம் 77]
  2. 2.0 2.1 "அது இனி சாத்தியமில்லை - ஓவியர் மாயா". சூரிய கதிர்: பக். 50-52. ஏப்பிரல் 2012. https://tamilcomicsulagam.blogspot.com/2012/06/comic-cuts-42news-42.html. பார்த்த நாள்: 25 சனவரி 2025. 
  3. ஓவியர் மாயா காலமானார்!, கல்கி, 23 சனவரி 2025
  4. ‘ஓவியர் மாயாவின் அற்புதக் காதல்!’, அந்திமழை, சனவரி 22, 2025
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_(ஓவியர்)&oldid=4197511" இலிருந்து மீள்விக்கப்பட்டது