உள்ளடக்கத்துக்குச் செல்

மாமண்டூர் குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாமண்டூர் குகைகள்

மாமண்டூர் குகைகள் என்பது திருவண்ணாமலை மாவட்டம். வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள மாமண்டூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள குகைகள் ஆகும். இது பல்லவர் காலத்திய குடைவரைக் குகைகள் ஆகும். இக்குகைகள் இயற்கையாக அமைந்த குன்றினை இணைத்து ஏற்படுத்தப்பட்ட பெரிய ஏரியின் கரைகளின் மீது அமைந்துள்ளன.[1]

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இடங்களுள் இதுவும் ஒன்று.[2] இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் இக்கோயில்கள், ஏழாம் நூற்றாண்டின் பல்லவ அரசன் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டதாக காணப்படுகிறது.[3] முதல் குகையில் காணப்படும் முதன்மைக் கடவுள் நரசிம்மர்[4]. இரண்டாவது குகை சைவ ருத்திரவலீசுவரம் குகை என பிந்தைய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Back to its grandeur". The Hindu. 18 March 2011 இம் மூலத்தில் இருந்து 25 மார்ச் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110325073206/http://www.hindu.com/fr/2011/03/18/stories/2011031850130300.htm. பார்த்த நாள்: 11 March 2014. 
  2. "Alphabetical List of Monuments - Tamil Nadu". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 9 March 2014. S. No. 200 — Rock Cut Caves, Sculptures And Inscriptions, Mamandur
  3. Gabriel Jouveau-Dubreuil (1917). The Pallavas. Asian Educational Services. pp. 39–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0574-9.
  4. N. S. Ramaswami (1989). 2000 Years of Mamallapuram: Text. Navrang. p. 201.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமண்டூர்_குகைகள்&oldid=3253892" இலிருந்து மீள்விக்கப்பட்டது