உள்ளடக்கத்துக்குச் செல்

மானசம்ரட்சணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானசம்ரட்சணம்
இயக்கம்கே. சுப்ரமணியம்
தயாரிப்புகே. சுப்ரமணியம்
கதைகே. சுப்ரமணியம்
நடிப்புஎஸ். டி. சுப்புலட்சுமி
சி. டி. ராசகாந்தம்
காளி. என். ரத்தினம்
வி. என். ஜானகி
வெளியீடு1945

மானசம்ரட்சணம் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்ரமணியம் கதை, வசனம் எழுதி, அவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்புலட்சுமி, சி. டி. ராஜகாந்தம், காளி என். ரத்தினம், வி. என். ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். உலகப் போரில் ரங்கூனுக்கு ஆதரவாக பிரித்தானியர்கள் அரசின் ஆலோசனையின் பேரில் இப்படம் தயாரிக்கப்பட்டது.[1]

கதைச் சுருக்கம்

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

1941ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சப்பானியர்கள் பர்மாவைத் தாக்கினர். இதன் காரணமாய் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறினர். சில காலம் கழித்து அங்கு தைரியமுடன் இருந்தவர்களும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் ஒருத்தி பத்மினி. பத்மினியின் கணவன் ரங்கூன் மிலிட்டரி டாக்டர். இவர்களது குழந்தை சரோசா, குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த கப்பலில் குழந்தை சரோசா அகப்பட்டுக்கொள்ள குழந்தையைத் தேடி தரைமார்க்கமாக இந்தியா வருகிறாள் பத்மினி. தகர்க்கப்படப் போகும் 14வது யுத்தக்கப்பலை பாதுகாக்க தன்னிடன் அழைத்து வந்த அனாதைக் குழந்தைகளைக் கொண்டு சதியை முறியடிக்கிறாள் கதாநாயகி.[1] [2]

சான்றடைவு

[தொகு]
  1. 1.0 1.1 சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988
  2. "Fifty Years of Indian Talkies" (1931-1981) A Commemorative Volume-1981-page-78

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானசம்ரட்சணம்&oldid=3880988" இலிருந்து மீள்விக்கப்பட்டது