மாநாட்டு அரங்கம்


மாநாட்டு மண்டபம், மாநாட்டு அரங்கம் (Conference hall) என்பது வணிக மாநாடுகள், கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படும் அறை ஆகும்.
அறை
[தொகு]இது பொதுவாக பெரிய விடுதிகள் மற்றும் மாநாட்டு மையங்களில் காணப்படுகிறது. பொதுவாக மருத்துவமனைகள் உட்பட பல இடங்களிலும் உள்ளன [1] . சில நேரங்களில் பெரிய அறைகள்கள், திருமண மண்டபங்கள் போன்றவை மாநாடு அரங்காக மாற்றியமைக்கப்படுகின்றன. மாநாட்டு அறைகள் அமைக்கபட்ட வானூர்திகளும் உள்ளன.[2] பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக மாநாட்டு அரங்குகள் சாளரங்கள் இல்லாமல் இருக்கக்கூடும். அத்தகைய ஒரு அரங்குக்கு எடுத்துக்காட்டாக டேங் எனப்படும் அரங்கம் பென்டகனில் உள்ளது.[சான்று தேவை]
பொதுவாக, மாநாட்டு அரங்குகளில் தளபாடங்கள், மேல்நிலை பிம்பம் காட்டும் கருவிகள், மேடை விளக்குகள், ஒலி பெருக்கி அமைப்புகளைக் கொண்டிருக்கும் . [3]
கட்டிடங்களின் மற்ற பகுதிகள் புகைபிடிப்பதை அனுமதிக்கும் போது கூட மாநாட்டு அரங்குகளில் புகைபிடிப்பது பொதுவாக தடைசெய்யப்படுகிறது. [4]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Rahul who? Challenge on home turf", TAPAS CHAKRABORTY, The Telegraph, 16 February 2008
- ↑ "Air Force One INDIA", இந்தியன் எக்சுபிரசு, Manu Pubby, February 17, 2008
- ↑ "Albert Hall Conference Centre" பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம், Conferences-UK.org.uk, retrieved 17 February 2008
- ↑ "Bills to ban public smoking defeated", OLYMPIA MEOLA TIMES, February 15, 2008