உள்ளடக்கத்துக்குச் செல்

மாதிரவேளூர் மாதலீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதிரவேளூர் மாதலீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:மாதிரவேளூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாதலீசுவரர்
தாயார்:சக்தி சுந்தர நாயகி[1]
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:சோழர்[1]

மாதிரவேளூர் மாதலீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், மாதிரவேளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலானது சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து 10 ஆம் எண் நகரப் பேருந்தில் ஏறினால் கோயிலை அடையலாம்

வரலாறு

[தொகு]

இக்கோயில் அமைப்பைக் கொண்டு பார்க்கையில் இது சோழர் காலத்தில் கட்டப்பட்டக் கோயிலாக இருக்கலாம் என்று அனுமானிக்கபடுகிறது.

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலின் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் பலிபீடம், நந்திதேவரைக் காணலாம். அதையடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் பிள்ளையார், சனீசுவரன் திருமுன்கள் உள்ளன. இதையடுத்து ஸ்தாபன மண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றை அடுத்துள்ள கருவறையில் கிழக்கு நோக்கி தாமரை வடிவாலான பீடத்தில் பாணலிங்கமாந் மதலீசுவரர் உள்ளார். கருவறைக் கோட்டத்தில் நர்த்தன கணபதி, தென்முகக் கடவுள், அண்ணாமலையார், பிரம்மர், விஷ்ணு துர்கை போன்றோர் காணப்படுகின்றனர். கருவறைக்கு வலப்புறமாக அம்மன் சிற்றாலமய் அமைந்துள்ளது. அதில் கிழக்கு நோக்கியவாறு நான்கு கரங்களுடன் அம்மன் உள்ளார். அம்மன் சிற்றாலயத்தின் தலமரமாக பாதிரி மரம் அமைந்துள்ளது. அருகே மங்கள கணபதி, சண்டிகேசுவரர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

கோயிலின் முதல் பிரகாரத்தில் கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், காசிவிசுவநாதர், கஜலட்சுமி, சண்டிகேசுவரர் சிற்றாலயங்களும், நவக்கிரகங்கள், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு ஒரு சிற்றாலயமும் அமைந்துள்ளன.[1]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் கந்தசட்டி உற்சவம் ஆறு நாட்கள் கொண்டாட்டப்படுகிறது. சிவராத்திரி நாளில் நான்கு கால பூசை நடத்தப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து திங்கட் கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. கடைசி திங்களன்று சங்காபிசேகம் செய்யப்படுகிறது. நவராத்தியின் ஒன்பது நாட்களுக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் செய்யபட்டடு, சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாதிரவேளுர் மாதலீஸ்வரர்". 2024-06-13. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)