உள்ளடக்கத்துக்குச் செல்

மாங்கனீசு(III) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு(III) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • மாங்கனீசு முக்குளோரைடு, மாங்கனீசு டிரைகுளோரைடு
இனங்காட்டிகள்
ChemSpider 8329698
InChI
  • InChI=1S/3ClH.Mn/h3*1H;/q;;;+3/p-3
    Key: UDBAOKKMUMKEGZ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12029980
  • Cl[Mn](Cl)Cl
பண்புகள்
MnCl3
வாய்ப்பாட்டு எடை 161.30 g/mol
உருகுநிலை −18 °C (0 °F; 255 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாங்கனீசு(III) குளோரைடு (Manganese(III) chloride) என்பது MnCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மாகும். இச்சேர்மம் கருதுகோள் நிலையில் உள்ளது.

இந்த இருபடி ஆலைடின் இருப்பு நிரூபிக்கப்படவில்லை.[1][2] ஆயினும்கூட, MnCl3 சேர்மத்தின் பல வழித்தோன்றல்கள் அறியப்படுகின்றன. பாதுகாப்பாக சேமிக்க இயலும் MnCl3(OPPh3)2 அணைவுச் சேர்மமும் மற்றும் MnCl3(THF)3 சேர்மமும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். MnCl3 சேர்மத்தின் மழுப்பலான தன்மைக்கு மாறாக, தனிமவரிசை அட்டவணையில் உள்ள அண்டை உலோகங்களின் முக்குளோரைடுகள்-இரும்பு(III) குளோரைடு, குரோமியம்(III) குளோரைடு மற்றும் தெக்கினீசியம்(III) குளோரைடு-அனைத்தும் தனிமைப்படுத்தக்கூடிய சேர்மங்களாகும்.

மாங்கனீசு(III) குளோரைடு வரலாறு

[தொகு]

MnCl3 ஒரு கருப்பு நிறத் திண்மமாகும். நீரற்ற மாங்கனீசு(III) அசிட்டேட்டு" மற்றும் திரவ ஐதரசன்குளோரைடு ஆகியவை −100 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் மாங்கனீசு(III) குளோரைடு உருவாகும். -40 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இச்சேர்மம் சிதைவடைகிறது.[3] மாங்கனீசு(III) ஆக்சைடு, மாங்கனீசு(III) ஆக்சைடு-ஐதராக்சைடு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் கார மாங்கனீசு அசிட்டேட்டு ஆகியவற்றின் வினையை உள்ளடக்கி மற்ற பண்புகள் உள்ளன. இருப்பினும் சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில், அத்தகைய பண்புகள் நிராகரிக்கப்பட்டுள்ளன அல்லது தீவிர சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளன.[4] குறிப்பாக, MnCl3 சேர்மத்தை ஒரு கூறாகக் கொண்ட அனைத்து அறியப்பட்ட சேர்மங்களும் கரைப்பான் அல்லது ஈந்தணைவி-நிலைப்படுத்தப்பட்ட கூட்டு விளைபொருள்கள் என்று அறியப்படுகிறது.

கூட்டு விளைபொருள்கள்

[தொகு]
MnCl3 சேர்மத்தின் நிலைப்புத்தன்மை கொண்ட ஒரு வழிப்பெறுதியான MnCl3(OPPh3)2 சேர்மம்.

மாங்கனீசு(III) குளோரைடு சேர்மமானது பல்வேறு இலூயிசு காரங்களுடன் சிக்கல் வினை மூலம் நிலைப்புத்தன்மை அடைகிறது. இது பல ஆண்டுகால ஆய்வின் போது நிறுவப்பட்டது.[4] சிற்றுறுதி நிலைப்புத்தன்மை கொண்ட அசிட்டோ நைட்ரைலின் -வரையளவு மாங்கனீசு(III) குளோரைடை அறை வெப்பநிலையில் Mn12O12(OAc)16(H2O)4 மும்மெத்தில்சிலில் குளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கலாம்.[5] மும்மெத்தில்சிலில்குளோரைடுடன் பெர்மாங்கனேட்டு உப்புகளைச் சேர்த்து சூடுபடுத்தும் போது ஆல்க்கீன் டைகுளோரினேற்ற வினைகளுக்கு தேவையான Mn(III)–Cl இனங்கள் கொண்ட கரைசல்களை உருவாக்குகிறது.[6][7][8] Mn(III)–Cl இடைநிலைகளைப் பயன்படுத்தும் மின்னாற்பகுப்பு முறைகள் இதே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளன.[9][10]

டெட்ராஐதரோபியூரானில் உள்ள ஐதரோகுளோரிக் அமிலத்துடன் மாங்கனீசு டை ஆக்சைடின் வினை MnCl3(H2O)(THF)2 சேர்மத்தை அளிக்கிறது.[4] டெட்ராஐதரோபியூரானில் தொங்கலாக உள்ள மாங்கனீசு(III) புளோரைடு போரான் முக்குளோரைடுடன் வினைபுரிந்து, MnCl3(THF)3 சேர்மத்தை தருகிறது. இது அடர் ஊதா நிற பட்டகம் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.[4] இச்சேர்மம் ஓர் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பைக் கொண்டுள்ளது. தண்ணீருடன் இது வினைபுரியும். அறை வெப்பநிலையில் சிதைவடையும்.[4]

இந்த தொடர் கூட்டு விளைபொருள்களில் மிக எளிதாக கையாளப்படுவது MnCl3(OPPh3)2 ஆகும்.[11]

பெண்டாகுளோரோமாங்கனேட்டு(III)

[தொகு]

மற்றொரு பொதுவான மாங்கனீசு(III) குளோரைடு சேர்மம் பெண்டாகுளோரோமாங்கனேட்டு(III) ஈரெதிர்மின் அயனியாகும். இது பொதுவாக டெட்ராயெத்திலமோனியம் போன்ற எதிர்மின்-அயனிகளுடன் சமநிலைப்படுத்தப்படுகிறது.[12] பெண்டாகுளோரோமாங்கனேட்டுகள் பொதுவாக பச்சை நிறத்தில் உள்ளன. ஒளி உணர்திறன் கொண்டவையாகவும் உள்ளன. இவை கரைசலில் ஐந்து ஒருங்கிணைப்புகளைப் பராமரிக்கின்றன. மேலும் அறை வெப்பநிலையில் S = 2 அடிமூலக்கூற்று நிலைகள் உள்ளன.[12][13] பெண்டாகுளோரோமாங்கனேட்டின் படிக கட்டமைப்புகள் எதிர்மின் அயனியின் சதுர பிரமிடு வடிவத்தைக் குறிக்கிறது.[14][15] ஈரெத்தில் ஈதரில் உள்ள [Mn12O12(OAc)16(H2O)4] சேர்மத்துடன் மும்மெத்தில்சிலில் குளோரைடை சேற்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் டெட்ராயெத்திலமோனியம் பெண்டாகுளோரோமாங்கனேட்டு(III), ([Et4N]2[MnCl5]) தயாரித்து தனிமைப்படுத்தலாம். வினையில் உருவாகும் பழுப்பு நிற திண்மப்பொருளை 0.6 மோலார் டெட்ராயெத்திலமோனியம் குளோரைடு கரைசலுடன் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.[5] பச்சை நிறத்தில் உருவாகும் விளைபொருள் காற்றில் நிலையானது ஆனால் அது இருட்டில் வைக்கப்பட வேண்டும்.

மாங்கனீசு(III) மோனோகுளோரைடு சேர்மங்கள்

[தொகு]

பெருவளைய டெட்ராடெண்டேட்டு ஒருங்கிணைப்புடன் கூடிய சில மாங்கனீசு சேர்மங்கள் மாங்கனீசு(III) மோனோகுளோரைடு, Mn(III)–Cl, நோக்குருவை நிலைப்படுத்துகின்றன. இயேக்கப்சனின் வினையூக்கியானது Mn(III)–Cl தொகுதியைக் கொண்ட ஒருங்கிணைப்பு சேர்மத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். N,N,O,O ஒருங்கிணைப்பு மூலம் இது நிலைப்படுத்தப்படுகிறது. இயேக்கப்சன் வினையூக்கி மற்றும் தொடர்புடைய Mn(III)–Cl வளாகங்கள் O-அணு பரிமாற்ற உலைகளுடன் வினைபுரிந்து அதிக இணைதிற Mn(V)Oவை உருவாக்குகின்றன. அவை ஆல்க்கீன் எபோக்சினேற்றத்தில் வினைபுரியும். டெட்ராபீனைல்பார்பைரின் Mn(III)Cl என்பது வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய சேர்மமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wiberg, Egon; Holleman, A. F.; Wiberg, Nils (2001). Inorganic chemistry. Nils Wiberg, A. F. Holleman (1st English ed.). San Diego: Academic Press. p. 1411. ISBN 0-12-352651-5. OCLC 48056955.
  2. Barber, M.; Linnett, J. W.; Taylor, N. H. (1961). "650. The halides of the transition elements of the first long period" (in en). Journal of the Chemical Society (Resumed): 3323–3332. doi:10.1039/jr9610003323. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. http://xlink.rsc.org/?DOI=jr9610003323. 
  3. A. Chretien; G. Varga (1936). "Le chlorure de manganèse trivalent" (in French). Bulletin de la Société Chimique de France (3): 2385–2394. https://books.google.com/books?id=vR1HAQAAIAAJ. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Nachtigall, Olaf; Pataki, Astrid; Molski, Matthias; Lentz, Dieter; Spandl, Johann (May 2015). "Solvates of Manganese Trichloride Revisited - Synthesis, Isolation, and Crystal Structure of MnCl3(THF)3: Solvates of Manganese Trichloride Revisited" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 641 (6): 1164–1168. doi:10.1002/zaac.201500106. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.201500106. 
  5. 5.0 5.1 Perlepes, Spiros P.; Blackman, Allan G.; Huffman, John C.; Christou, George (April 1991). "Complete carboxylate removal from [Mn12O12(OAc)16(H2O)4.cntdot.2HOAc.cntdot.4H2O) with chlorotrimethylsilane: synthesis and characterization of polymeric (2,2'-bipyridine)trichloromanganese and an improved synthesis of bis(tetraethylammonium) pentachloromanganate(2-)"] (in en). Inorganic Chemistry 30 (7): 1665–1668. doi:10.1021/ic00007a046. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic00007a046. 
  6. Donnelly, K. D.; Fristad, W. E.; Gellerman, B. J.; Peterson, J. R.; Selle, B. J. (1984-01-01). "Chlorination of alkenes by manganese(III) chloride species" (in en). Tetrahedron Letters 25 (6): 607–610. doi:10.1016/S0040-4039(00)99950-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4039. https://www.sciencedirect.com/science/article/pii/S0040403900999507. 
  7. Bellesia, Franco (1989). "Chlorination of Alkenes with Manganese Dioxide-Trimethylchlorosilane". Journal of the Chemical Society, Dalton Transactions (4): 108–109. doi:10.1039/DT98900BX019. https://pubs.rsc.org/en/Content/ArticlePDF/1989/DT/DT98900BX019?page=Search. 
  8. Parisotto, Stefano; Azzi, Emanuele; Lanfranco, Alberto; Renzi, Polyssena; Deagostino, Annamaria (June 2022). "Recent Progresses in the Preparation of Chlorinated Molecules: Electrocatalysis and Photoredox Catalysis in the Spotlight" (in en). Reactions 3 (2): 233–253. doi:10.3390/reactions3020018. பன்னாட்டுத் தர தொடர் எண்:2624-781X. 
  9. Fu, Niankai; Sauer, Gregory S.; Lin, Song (2017-10-23). "Electrocatalytic Radical Dichlorination of Alkenes with Nucleophilic Chlorine Sources". Journal of the American Chemical Society 139 (43): 15548–15553. doi:10.1021/jacs.7b09388. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:28988482. http://dx.doi.org/10.1021/jacs.7b09388. 
  10. Dong, Xichang; Roeckl, Johannes L.; Waldvogel, Siegfried R.; Morandi, Bill (2021-01-29). "Merging shuttle reactions and paired electrolysis for reversible vicinal dihalogenations" (in en). Science 371 (6528): 507–514. doi:10.1126/science.abf2974. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:33510026. Bibcode: 2021Sci...371..507D. https://www.science.org/doi/10.1126/science.abf2974. 
  11. Saju, Ananya; Griffiths, Justin R.; MacMillan, Samantha N.; Lacy, David C. (2022-09-06). "Synthesis of a Bench-Stable Manganese(III) Chloride Compound: Coordination Chemistry and Alkene Dichlorination" (in en). Journal of the American Chemical Society 144 (37): 16761–16766. doi:10.1021/jacs.2c08509. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:36067378. பப்மெட் சென்ட்ரல்:11648269. https://pubs.acs.org/doi/10.1021/jacs.2c08509. 
  12. 12.0 12.1 Levason, W.; McAuliffe, C. A. (1973-01-01). "The co-ordination chemistry of manganese. Part II. Some pentachloromanganates(III)" (in en). Journal of the Chemical Society, Dalton Transactions (4): 455–458. doi:10.1039/DT9730000455. பன்னாட்டுத் தர தொடர் எண்:1364-5447. https://pubs.rsc.org/en/content/articlelanding/1973/dt/dt9730000455. 
  13. Akabori, Kozo (1974-12-05). "Thermal properties of n, n′-dihydro-1,10-phenanthrolinium and n,n′-dihydro-2, 2′-bipyridinium pentachloromanganates(iii)". Chemistry Letters 3 (12): 1481–1486. doi:10.1246/cl.1974.1481. பன்னாட்டுத் தர தொடர் எண்:0366-7022. https://www.journal.csj.jp/doi/10.1246/cl.1974.1481. 
  14. Bernal, Ivan; Elliott, Norman; Lalancette, Roger (1971-01-01). "Molecular configuration of the anion MnCl52–—a square pyramidal pentahalide of the 3d transition series" (in en). Journal of the Chemical Society D: Chemical Communications (15): 803–804. doi:10.1039/C29710000803. பன்னாட்டுத் தர தொடர் எண்:0577-6171. https://pubs.rsc.org/en/content/articlelanding/1971/c2/c29710000803. 
  15. Matsui, Masanori; Koda, Shigetaka; Ooi, Shun′ichiro; Kuroya, Hisao; Bernal, Ivan (1972-01-05). "THE CRYSTAL STRUCTURE OF PHENANTHROLINIUM PENTACHLOROMANGANATE(III), (phenH2)(MnCl5)". Chemistry Letters 1 (1): 51–53. doi:10.1246/cl.1972.51. பன்னாட்டுத் தர தொடர் எண்:0366-7022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு(III)_குளோரைடு&oldid=4213024" இலிருந்து மீள்விக்கப்பட்டது