மாக்சு டெக்மார்க்
மாக்சு டெக்மார்க் ( Max Erik Tegmark 5 மே 1967) என்பவர் சுவீடிய அமெரிக்க அண்டவியலாளர் ஆவார். எம். ஐ. டி. என்று கூறப்படும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கிறார். பவுன்டேசனல் கொஸ்டின்ஸ் நிலையத்தில் அறிவியல் இயக்குனராகவும் உள்ளார். மேலும் பியூச்சர் ஆப் லைப் இன்ஸ்டிடியூட் என்பதைத் தோற்றுவித்தவர்களில் மாக்சு டெக்மார்க் ஒருவர் ஆவார்.
அவுர் மேதமெடிக்கல் யூனிவர்ஸ் என்ற நூலையும் செயற்கை நுண்ணறிவு பற்றிய ஒரு நூலையும் எழுதியுள்ளார். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியினால் உண்டாகும் இன்னல்களை பற்றி ஆராய்வதற்காக எலான் மசுக் என்ற அமெரிக்கத் தொழில் முனைவோர் மாக்சு டெக்மார்க்குக்கு நன்கொடையை வழங்கியுள்ளார்.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்புகள்
[தொகு]சுவீடனில் பிறந்த மாக்சு டெக்மார்க் பட்டப் படிப்பை ஸ்டாக்ஹோமில் உள்ள இராயல் தொழில்நுட்பக் கழகத்திலும் பின்னர் ஸ்டாக்ஹோம் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ் என்ற நிறுவனத்திலும் முடித்தார். தமது ஆய்வுப் பட்டத்தை பெர்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து பெற்றார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணி செய்தார். தற்சமயம் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பணி ஆற்றுகிறார். அண்டவியலைப் பற்றிய ஆராய்ச்சியை முனைப்பாகச் செய்து வருகிறார்.
பணிகள்
[தொகு]பிபிசி தொலைக்காட்சியில் பல அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கரும்புள்ளி, முடிவிலி என்பதும் அதற்கப்பாலும், பிரபஞ்சம் பற்றிய கருத்துக்கள் ஆகிய பொருண்மைகளில் பேசியுள்ளார். அமெரிக்கன் தொலைக்காட்சி ஆவணப் படங்களில் அறிவியல் புனைவுகள் பற்றிய தொடர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்தத் தொடர் நிகழ்ச்சி மிசியோ காகு என்ற அறிவியல் பரப்புநரால் உருவாக்கப்பட்டது . 2014 இல் தி ஹப்பிங்டன் போஸ்ட் என்ற செய்தித் தாளில் அதி நுண்ணறிவு எந்திரங்கள் பற்றிய கருத்துக் கட்டுரையை ஸ்டீபன் ஹோக்கிங் போன்ற சில அறிஞர்களின் கூட்டு முயற்சியில் எழுதினார்.[4]
எழுதிய நூல்கள்
[தொகு]Our Mathematical Universe, 2014 - "Tegmark is one of the rock Gods of cosmology" Daily Telegraph. - "Brilliantly argued and beautifully written" The New York Times.
Life 3.0 Being Human in the Age of Artificial Intelligence, 2017 - "This is a rich and visionary book and everyone should read it" The Times.
மேற்கோள்
[தொகு]- ↑ The Future of Computers is the Mind of a Toddler, Bloomberg
- ↑ "Elon Musk:Future of Life Institute Artificial Intelligence Research Could be Crucial". Bostinno. 2015. Archived from the original on 2 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 21 Jun 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Elon Musk Donates $10M To Make Sure AI Doesn't Go The Way Of Skynet". TechCrunch. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 Jun 2015.
- ↑ http://www.huffingtonpost.com/stephen-hawking/artificial-intelligence_b_5174265.html