மஸ்கான் சாவடி சந்தை
மஸ்கான் சாவடி சந்தை என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தலைநகரான சென்னையில் ஞாயிறு தோறும் நடக்கும் செல்லப்பிராணிகளுக்கான ஒரு வாரச்சந்தை ஆகும்.[1]
மஸ்கான் சந்தையானது சென்னையின் பிராட்வேயில் உள்ள அம்மன் கோயில் தெருவில் ஞாயிறு தோறும் நடக்கிறது.[2] அம்மன் கோயில் தெருவுக்கு மஸ்கான் சாவடி என்ற பெயரும் உள்ளதால் இந்த சந்தை மஸ்கான் சாவடி சந்தை என்று அழைக்கப்படுகிறது. இந்த சந்தையானது ஞாயிறு அதிகாலை 4 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிவரை நடக்கிறது. இந்த சந்தையில் பலவகையான பந்தையப் புறாக்கள், ஆடல்புறாக்கள், வேறு வகையான வளர்ப்புப் பறவைகள், வண்ண மீன்கள், பலவகையான கோழிகள், முயல்கள், நாய்கள், பறவைக் கூண்டுகள், நாய்ச் சங்கிலிகள், கழுத்துப் பட்டைகள், பறவைகளுக்கான தீனி போன்றவை விற்க்கப்படுகின்றன. இந்த சந்தையானது பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இறைச்சிக்காக துவக்கப்பட்டது. பின்னர் புறாவுக்கு முக்கியத்துவம் வாய்நதாக மாறியதாக கூறப்படுகிறது.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ User, Super. "சென்னையின் பழமை மாறமல் இருக்கும் மஸ்கான் சாவடி சந்தை". Newsj (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2021-09-17. Retrieved 2021-09-17.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "Pets Market..! - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. Retrieved 2021-09-17.
- ↑ வெ.நீலகண்டன். "ஆதி சென்னையின் அடையாளங்களாக மிஞ்சியிருக்கும் சந்தைகள்!". https://www.vikatan.com/. Retrieved 2021-09-17.
{{cite web}}
: External link in
(help)|website=