மழைச்சோறு வழிபாடு
Appearance
மழைச் சோறு வழிபாடு என்பது மழை வேண்டி நடத்தப்படும் மழை சடங்குகளில் ஒன்றாகும். [1] பெண்களும் சிறுமிகளும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளும் மழை சோறு வேண்டி நிற்கின்றனர். பிச்சையாக இடுகின்ற சோறினை சேகரித்து அனைவரும் பகிர்ந்து உண்கின்றனர். இந்த சடங்கு முறைகளால் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.[2]
மழை பொய்த்ததால் மக்கள் பின்வருமாறு பாடுகின்றனர்.[3]
வாளியிலே மாக்க ரைச்சு
வாசலெல்லாம் கோலம் போட்டு
கோலம் கரைய வில்லை
கொள்ளை மழை பேயவில்லை
கூழ் காய்ச்சும் வழிபாடு
[தொகு]மாரி என்று மழையின் கடவுளாக வழிபடப்பட்டு மாரியம்மனாக வணங்கப்படும் தெய்வத்திற்கு கூழ் காய்ச்சி வணங்கும் முறையும் மழைச்சடங்குகளில் ஒன்றாகும்.
கூழ் காய்ச்சும் சடங்கிற்காக ஒவ்வொரு வீடாக சென்று தானியங்களை சேகரித்து வந்து அதனைக் கொண்டு கூழ் காய்ச்சி குடிக்கின்றனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ "மழை வேண்டி மழைச்சோறு எடுக்கும் வினோத வழிபாடு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
- ↑ "மழைச்சோறு சேகரித்து வழிபாடு வறட்சியை விரட்ட நூதனம்". Dinamalar. 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
- ↑ அ.கௌரன். "கொங்குநாட்டு மழைச்சோறு வழிபாடு". பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்.
{{cite book}}
: Unknown parameter|மொழி-=
ignored (help)