உள்ளடக்கத்துக்குச் செல்

மலம்புழா

ஆள்கூறுகள்: 10°49′N 76°39′E / 10.817°N 76.650°E / 10.817; 76.650
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலம்புழா
சிற்றூர்
மலம்புழா is located in கேரளம்
மலம்புழா
மலம்புழா
கேரளத்தில் அமைவிடம்
மலம்புழா is located in இந்தியா
மலம்புழா
மலம்புழா
மலம்புழா (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°49′N 76°39′E / 10.817°N 76.650°E / 10.817; 76.650
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்மலம்புழா கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்174.58 km2 (67.41 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்11,879
 • அடர்த்தி68/km2 (180/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678005,678651
தொலைபேசி குறியீடு0491
வாகனப் பதிவுKL-09
Parliament constituencyபாலக்காடு
சட்டமன்றத் தொகுதிமலம்புழா

மலம்புழா (Malampuzha) என்பது இந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். இது மலம்புழா அணையிலிருந்து சுமார் 3.5 கிமீ (2.2 மைல்) தொலைவிலும், பாலக்காடு நகரத்திலிருந்து 14 கிமீ (8.7 மை) தொலைவிலும் அமைந்துள்ளது.

போக்குவரத்து

[தொகு]

மலம்புழா அணையும் பூங்காவும்

[தொகு]

மலம்புழா அணையும் பூங்காவும் பாலக்காடு நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது 1955 இல் கட்டப்பட்டது. பூங்கா 2012 இல் புதுப்பிக்கபட்டது. இங்கு தொங்கு பாலம், கேபிள் கார் சவாரி, கற்பனை பூங்கா, ஒரு ஜப்பானிய தோட்டம் உட்பட பல தோட்டங்கள் உள்ளன. கேரள பழமைவாத சமூகத்தால் நிர்வாணச் சிலைக் கட்டமைப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், கேனாய் குஞ்ஞிசிராமனின் யட்சினி சிலை புகழ் பெற்றது. [2] அணையை பேருந்து மூலம் அடையலாம், கடைசி பேருந்து இரவு 8.00 மணிக்கு ஊருக்கு திரும்பும். அருகிலுள்ள தொடருந்து நிலையம் பாலக்காடு சந்திப்பு ஆகும், இது ஒலவக்கோடு என்று அழைக்கப்படுகிறது. [3]

யட்சி சிலை

முக்கியமான அடையாளங்கள்

[தொகு]
  • சாய் நர்சிங் மருத்துவமனை
  • அகத்தேதர இரயில்வே கேட்
  • ஷப்ரி ஆசிரமம்
  • என்எஸ்எஸ் பொறியியல் கல்லூரி
  • கிறிஸ்தவ சகோதரர்கள் தேவாலயம்
  • அரசு ஐடிஐ மலம்புழா
  • எஸ்ஐ-எம்ஈடி செவிலியர் கல்லூரி
  • ஆஷ்ரம் பழங்குடியினர் பள்ளி
  • மதுரை வீரன் கோயில்
  • தேசிய மீன் விதை பண்ணை
  • மலம்புழா அணையும் பூங்காக்களும்

புறநகர் பகுதிகளும் கிராமங்களும்

[தொகு]
  • ஆலம்கோடு (7C), நீலிக்காடு, இரயில் நகர், ஆண்டி மடம் மற்றும் சினேகா நகர்
  • நடக்கவு, கல்லேக்குளங்கரா, தேவி நகர் மற்றும் சித்ரா சந்திப்பு
  • சிவ நகர், சாஸ்தா நகர், மந்தக்காடு மற்றும் என்.பி.எம்.நகர்
  • கிருபா சதன் நகர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா நகர்

அரசியல்

[தொகு]

இந்த ஊர் மலம்புழா சட்டமன்றத் தொகுதி மற்றும் பாலக்காடு மக்களவைத் தொகுதியின் ஆகியவற்றுக்ககு உட்பட்டது. [4]

கல்வி

[தொகு]
  • அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி, மலம்புழா
  • ஜவஹர் நவோதயா வித்யாலயா, பாலக்காடு

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Malampuzha-I Population - Palakkad District, Kerala".
  2. Priya, K. Krishna (2021-09-30). "Nudity In Art: Analysing The Politics Of Nakedness Through The Sculptures Of Kanayi Kunhiraman". Feminism in India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2024-05-01.
  3. "Malampuzha Dam - Driving Directions, Route Map, Shortest Route, Distance from Cities". www.malampuzhadam.com. Retrieved 2024-05-01.
  4. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. Retrieved 2008-10-19.

வெளி இணைப்புகள்

[தொகு]

மலம்புழா சுற்றுலா

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலம்புழா&oldid=4193284" இலிருந்து மீள்விக்கப்பட்டது