மலபார் டேனியோ
மலபார் டேனியோ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரினிபார்மிசு
|
குடும்பம்: | சைப்பிரினிடே
|
பேரினம்: | தேவேரியோ
|
இனம்: | தே. மலபாரிக்கசு
|
இருசொற் பெயரீடு | |
தேவேரியோ மலபாரிக்கசு (ஜெர்டன், 1849) |
மலபார் டேனியோ (தேவேரியோ மலபாரிக்கசு) என்பது மின்னோ குடும்பத்தைச் சேர்ந்த (சைப்ரினிடே) வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் மீன் சிற்றினம் ஆகும். இலங்கை மற்றும் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள நிலப் பகுதியில் தோன்றிய இந்த மீன், மீன் வர்த்தகம் மூலம் உலகம் முழுவதும் காணப்படுகிறது. இது அதிகபட்சமாக 6 அங் (15 cm) நீளம் வரை வளரும் ஆனால் வீட்டுக் காட்சியகத்தில் அரிதாக 4 அங் (10 cm) விட அதிகமாக வளருகிறது.
வாழிடமும் உணவும்
[தொகு]மலபார் டேனியோ வெப்பமண்டல காலநிலையில் மலை நீரோடைகள் முதல் சிறிய குளங்கள் வரை பல்வேறு வகையான நீரில் காணப்படுகிறது. ஆனால் இது ஓடும் நீரையே விரும்புகிறது. இது ஒரு சுறுசுறுப்பான, கூட்டமாகக் காணப்படும் மீன். இது குழுக்களாக இருக்க விரும்புகிறது. இதன் உணவில் பூச்சிகள் மற்றும் தாவர பொருட்கள் உள்ளன.
இனப்பெருக்கம்
[தொகு]மலபார் டேனியோக்கள் கருமுட்டை இட்டு இனப்பெருக்கம் செய்யக் கூடியவை. மேலும் பலத்த மழைக்குப் பிறகு ஆழமற்ற நீரில் அடியில் வளரும் தாவரங்களில் முட்டையிடும். முதிர்ச்சியடைந்த மீன் ஒன்று 200 வெளிர்-ஆரஞ்சு, ஒட்டும் முட்டைகளை இடும். இவை ஒன்று முதல் இரண்டு நாட்களில் பொரிக்கும். ஐந்து நாட்களுக்குப் பிறகு குஞ்சுகள் சுதந்திரமாக நீந்தும். முட்டைகளை உண்பதைத் தடுக்க இதன் பெற்றோர்கள் முட்டையிருக்கும் பகுதியிலிருந்து அகற்றப்பட வேண்டும்.
வகைப்பாட்டியல்
[தொகு]இந்த சிற்றினம் முன்பு தேவேரியோ ஏக்விபினாடசு-ன் ஒத்த இனமாகத் தவறாகக் கருதப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Raghavan, R.; Rema Devi, K.R. (2011). "Devario malabaricus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2011: e.T169602A6651658. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T169602A6651658.en. http://www.iucnredlist.org/details/169602/0. பார்த்த நாள்: 14 January 2018.
- Froese, Rainer, and Daniel Pauly, eds. (2004). Devario malabaricus in FishBase. September 2004 version.