மலக்குகள்
இக்கட்டுரை பின்வரும் தொடரின் பகுதியாகும்: |
இசுலாம் |
---|
இசுலாம் வலைவாசல் |
இசுலாத்தில் மலக்குகள் ( அரபு மொழி: ملائكة மலாஇகா; ஒருமை: ملاك மலக்கு) என்பவர்கள் அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். மனிதர்களால் காணவியலாது. இவர்கள் தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாவின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவர்கள்.
பல்வேறுபட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாவால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன. எடுத்துக்காட்டாக,
- ஜிப்ராயீல் (அலை) - வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
- மீக்காயீல் (அலை) - மழை கொண்டு வரும் மலக்கு
வானவர்களின் பணிகள்:
1* இறை தூதின்(வஹி) பொறுப்பு.-வானவர் தேவதூத தலைவர் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறைதூதர்களுக்கு (நுபுவ்வத் என்னும்) தூதுவச் செய்திகளை கொண்டு வருவதே இவர்களின் பணியாகும்.
2* மழை, காற்றின் பொறுப்பு.- இதன் பொறுப்பாளர் வானவர் மீக்காயீல். இவர் மழை, காற்று,மரம் செடி கொடிகள் முதலானவற்றுக்குப்; பொறுப்பாளர் ஆவார்.
3* சூர் (எக்காளம்)ஊதுவதின் பொறுப்பு.- இதன் பொறுப்பாளர் இஸ்ராஃபீல் (அலை).
4*உயிரைக் கைப்பற்றும் வானவர். (மலக்குல் மவ்த்) உயிரைக்கைப்பற்றும் வானவருக்கு மலக்குல் மவ்த் எனக் குர்ஆன் கூறுகிறது. இவர்கள் பெயர் இஸ்ராயீல் என்று சொல்லப் படுகிறது.
7,8*மனிதனின் நன்மை தீமைகளை பதிவு செய்யும் வானவர்- வலது பக்கமும் இடது பக்கமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ‘ரகீபுன் அத்தீத்’இது அவர்களின் பெயர்களல்ல. அவர்களின் பண்புப் பெயர்களாகும். ‘கிராமன் காத்திபீன்’ கண்ணியத்திற்குரிய எழுத்தாளர்கள் என்று அல்லாஹ்வே சிறப்பிக்கிறான்.(82;:12)
5,6* கப்ரில் (மண்ணறையில்) வருகை தரும் வானவர்கள்.- இவர்களின் பெயர்கள் முன்கர்,நக்கீர்.
9*சுவர்க்கத்தின் காவலர்கள் (خزنة الجنة ) -அதன் தலைவர் ரிழ்வான் ஆவார்கள்,
10* நரகின் காவலர்கள் (خزنة جهنم)-அதன் தலைவர் மாலிக் ஆவார்
இது அல்லாது கணக்கற்ற மலக்குகள் உள்ளனர்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பிரித்தானிய அருங்காட்சியகம்". Archived from the original on 2012-02-04. பார்க்கப்பட்ட நாள் 2012-09-21.