உள்ளடக்கத்துக்குச் செல்

இசுலாத்தில் கடவுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுலாமிய நம்பிக்கைகளின் படி, கடவுள் (அரபு மொழி: اللهAllāh) என்பவர் அனைத்து ஆற்றல்களும் கொண்டவராகவும் அனைத்தையும் பற்றி அறிந்தவாராகவும், அனைத்தையும் படைத்துக் காப்பவராகவும், இவ்வுலகின் அதிபதியும் ஆவார்.[1] இசுலாம் ஓரிறைக் கொள்கையை (tawḥīd )[2] வலியுறுத்துகிறது.[3] குர்ஆன் இறைவனைப் பற்றிக் கூறும் போது, "அவனைக் கண்கள் காணாது. ஆனால் அவனோ கண்களைக் காண்கிறான்: அதாவது கடவுள் எதனுடனும் ஒப்பிடத் தகுந்தவரல்லர். அனைத்தையும் விட உயர்வானவர்." எனக் குறிப்பிடுகின்றது.[4][5][6]

குர்ஆனின் 112 ஆவது சூராவனது அல்-இக்லாசு (உளத்தூய்மை) அல்லாஹ்வின் தகுதிகளைக் கூறுகிறது.

(112:1) قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ "அல்லாஹ் , [அவன்] ஒருவனே", (112:2) اللَّهُ الصَّمَدُ "அல்லாஹ் , எவ்வித தேவையும் அற்றவன்". (112:3) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ "அவன் (யாரையும்) பெறவுமில்லை, (யாராலும்) பெறப்படவுமில்லை". (112:4) وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ "அவனுக்கு நிகராக எதுவுமில்லை."[7]

இசுலாத்தில் 99 பெயர்களால் (أسماء الله الحسنى al-asmāʼ al-ḥusná பொருள்: "அழகிய பெயர்கள்"), கடவுள் குறிப்பிடப்படுகிறார். ஒவ்வொரு பெயரும் கடவுளின் ஒவ்வொரு தன்மையைக் குறிப்பதாகும்.[8][9] இந்த அனைத்துப் பெயர்களும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும்.[10] இந்த தொன்னூற்று ஒன்பது பெயர்களுள் அதிகம் பயன்படுத்தப்படுபவை "அளவற்ற அருளாளன்" (al-raḥmān) மற்றும் "நிகரற்ற அன்புடையோன்" (al-raḥīm) என்பவையாகும்.[8][9] இப்பெயர்கள் குர்ஆனின் முதல் சூராவான பாத்திஹாவின் ஆரம்ப வசனங்களில் கூறப்படுகின்றன. அகில உலகங்களில் உள்ள அனைத்தையும் படைத்து, அவை அனைத்தையும் காத்து, அவற்றை நேரிய வழிகளில் செலுத்தும் இறைவன் அளவற்ற அருளாளனகவும், நிகரற்ற கருணையும், அன்பும் கொண்டவன் என்பது இப்பெயர்களின் பொருள்களாகும்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கெர்கார்டு போவரிங்கு காடு அண்டு இசு அட்ரிபியூட்சு (ஆங்கிலம்), குர்ஆனின் கலைக்களஞ்சியம் Quran.com, இசுலாம்: தி இசுட்ரெய்ட்டு பாத்து (ஆங்கிலம்), ஆக்சுபோர்டு பல்கலைகலைக்கழக பதிப்பகம், 1998, p.22
  2. சான் எல். எசுபோசிட்டோ, இசுலாம்: தி இசுட்ரெய்ட்டு பாத்து (ஆங்கிலம்), ஆக்சுபோர்டு பல்கலைகலைக்கழக பதிப்பகம், 1998, p.88
  3. "அல்லாஹ்." பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் 2007. பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்
  4. திருக்குர்ஆன் 6:103
  5. திருக்குர்ஆன் 29:46
  6. எபு. இ. பீட்டர்சு, இசுலாம் (ஆங்கிலம்), p.4, பிரின்சுடன் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2003
  7. "புனித குர்ஆன்".
  8. 8.0 8.1 பென்ட்லி, டேவிட்டு (செப்டம்பர் 1999). தி 99 பியூட்டிபுல் நேம்சு ஆப் காடு பார் ஆல் தி பீப்பிள் ஆப் தி புக்கு (ஆங்கிலம்). வில்லியம் கேரி நூலகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87808-299-9. {{cite book}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |coauthors= (help)
  9. 9.0 9.1 என்சைக்ளோபீடியா ஆப் மாடர்ன் மிடில் ஈசுடு அண்டு நார்த்து ஆப்ரிக்கா, அல்லாஹ்
  10. அன்னிமேரி இசுக்கிம்மல்,தி தாவோ ஆபு இசுலாம்: ஏ சோர்சுபுக்கு ஆன் சென்டர் ரிலேசுன்சிப் இன் இசுலாமிக்கு , சனி பிரசு, p.206
  11. பிரிட்டானிகா கலைக்களஞ்சியம், இசுலாம், p. 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாத்தில்_கடவுள்&oldid=3658335" இலிருந்து மீள்விக்கப்பட்டது