மறுசுழற்சிக் கூடை
கணித்தலில், மறுசுழற்சிக் கூடை என்பது, அழிக்கப்பட்ட கோப்புகளைத் தற்காலிகமாகச் சேமிக்க உதவும் இடமாகும். இது ஒரு சிறப்பு அடைவாகும். தவறுதலாக அழிக்கப்பட்ட கோப்புகளையும், அடைவுகளையும், இச்சிறப்பு அடைவானது சேமித்து வைக்கும். இங்குள்ள கோப்புகளையும், அடைவுகளையும் மீளமைக்க இயலும்.
வரலாறு
[தொகு]1982ஆம் ஆண்டு, ஆப்பிள் லிசா இடைமுகப்பானது, இந்த மறுசுழற்சிக் கூடையை, "வேசுட்டுபேசுகட்" என்ற பெயரில் அறிமுகம் செய்தது. இது மேக் இயங்குதளத்தில் டிராசு என்றழைக்கப்பட்டது.[1] ஒன்பதாம் பதிப்பில் உலகளாவிய ஆங்கில இடத்தகு மாற்றத்தில் இது திரும்பவும், வேசுட்டுபேசுகட் என்ற பெயரை பெற்றது. [2]
ஆப்பிள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் இலச்சினையைக் காப்புரிமை செய்துள்ளது. இது பிற நிறுவனங்கள் அந்த இலச்சினையைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.[3] பிற நிறுவனங்கள் மறுசுழற்சிக்கூடையின் வேறு பெயர்களில் இலச்சினையை உருவாக்கி உள்ளன. [4]
எம்எஸ்-டொஸ் இயங்குதளத்தில் இம்மறுசுழற்சி முறை, "டெலிட் சென்ட்ரி" என்ற பெயரில் அறிமுகமானது. அழிக்கப்படும் கோப்புகள் மூல அடைவில் உள்ள "சென்ட்ரி" என்ற அடைவொன்றில் சேமிக்கப்பட்டது.[5][6]] மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போதுள்ள மறுசுழற்சிக் கூடையை வின்டோசு 95 இயங்குதளத்தில் அறிமுகம் செய்தது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Macintosh Stories: Busy Being Born".
- ↑ "GUIdebook > Extras > Trivia".
- ↑ "APPLE COMPUTER, INC. v. பரணிடப்பட்டது 2007-12-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Lewis, Peter H. (27 August 1991). "PERSONAL COMPUTERS; Norton Desktop for Windows". The New York Times.
- ↑ "Delete Sentry Automatically Purges Files When Necessary".
- ↑ "Now You Delete It, Now You Don't".
- ↑ "How the Recycle Bin Stores Files".